பள்ளிபாளையம் ஓங்காளியம்மன் கோவிலில் பூ மிதி திருவிழா
பள்ளிபாளையம் ஓங்காளியம்மன் கோவிலில் பூ மிதி திருவிழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில், அருள்மிகு ஸ்ரீ குண்டத்து ஓங்காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கிய நிலையில், திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று பூமிதி திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுவர், சிறுமியர், மற்றும் பக்தர்கள் தங்கள் கை குழந்தையுடன் ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன்பூ மிதி திருவிழாவில் பங்கேற்றனர்.
மேலும் ஓங்காளியம்மனுக்கு விசேஷ வழிபாடு தீபாராதனை நிகழ்வுகள் நடைபெற்று கோவில் வளாகப் பகுதியில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு மேற்கொண்டனர்..மேலும் பூ மிதி திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வை ஒட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu