குமாரபாளையத்தில் மதிமுக சார்பில் கொடியேற்று விழா

குமாரபாளையம் ம.தி.மு.க. சார்பில் நடந்த கொடியேற்று விழாவில், ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி பங்கேற்று, கட்சிக்கொடியேற்றி வைத்தார்.
குமாரபாளையம் ம.தி.மு.க. சார்பில் கொடியேற்று விழா நடந்தது.
செப்.15ல் மதுரையில் ம.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 115வது பிறந்த நாள் மாநாடு நடைபெறவுள்ளது. இதனையொட்டி பொதுமக்களிடையே மாநாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த குமாரபாளையம் நகரில் காவேரி நகர், காவேரி பாலம், சந்தை திடல், பஸ் ஸ்டாண்ட், நகராட்சி அலுவலகம், ஆனங்கூர் பிரிவு, அம்மன் கோவில் பாலம், சிவசக்தி நகர், உள்பட 16 இடங்களில் கட்சியின் கொடியை ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி ஏற்றிவைத்தார். இவருடன் மாவட்ட செயலர் கணேசன், ஈரோடு மாநகர் மாவட்ட செயலர் முருகன், நகர செயக்ர் நீலகண்டன், மாவட்ட பொருளர் சிவம் உள்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மாநாடு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
மதுரையில் மதிமுக மாநில மாநாடு: சென்னை எழும்பூரில் மதிமுக மண்டல செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மறைந்த முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளான செப்.15ம் தேதி மதுரையில் மதிமுக எழுச்சி மாநாடு நடத்த உள்ளதாக அறிவித்தார். நாங்கள் நிதிக்கு கஷ்டப்பட்டாலும், தொண்டர்களின் நிதியை பயன்படுத்தி கட்சியை நடத்திக் கொண்டு வருகிறோம் என்றார்.
வலையங்குளத்தில் வருகிற 15- ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர். மாநிலம் முழுவதும் இருந்து திரளான மதிமுக தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி வலையங்குளத்தில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதனை பூமிநாதன் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் பொருளாளர் சுருதி ரமேஷ் பார்வையிட்டனர். இதில் நிர்வாகிகள் சுப்பையா, கீரைத்துரைபாண்டியன் பாஸ்கரசேதுபதி, பச்சமுத்து. புகழ்முருகன், மாயழகு., அய்யனார். காளிமுத்து முத்துலட்சுமி, கரு.சுந்தர், அன்னமுகமது, கவுரி மகேஷ், திருப்பரங்குன்றம் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu