குமாரபாளையம் முன்னாள் நகர்மன்ற தலைவர் சேகர் முதலாம் ஆண்டு நினைவு நாள்

குமாரபாளையம் முன்னாள் நகர்மன்ற தலைவர் சேகர் முதலாம் ஆண்டு நினைவு நாள்
X

குமாரபாளையத்தில் முன்னாள் நகர்மன்ற தலைவர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

குமாரபாளையம் முன்னாள் நகர்மன்ற தலைவர் சேகர் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு நடைபெற்றது.

குமாரபாளையம் முன்னாள் நகர்மன்ற தலைவர் சேகர் முதலாவது ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர பொறுப்பாளர் செல்வம் தலைமை வகித்தார். தி.மு.க சார்பில் கட்சி அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், ஆனங்கூர் பிரிவு, மற்றும் 33 வார்டுகளில் அவரது திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் முன்னாள் சேர்மன் நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது.

இதே போல் நிர்வாகி செல்வராஜ் தலைமையில் சேகரின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மூத்த நிர்வாகிகள் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜெகன்னாதன், சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் மாணிக்கம், கல்வியாளர் இளவரசு, மற்றும் நிர்வாகிகள் அன்பழகன், அன்பரசு, ரவி, கோவிந்தராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai marketing future