உயர் தொழில் நுட்ப பூங்காவில் தீ விபத்து

உயர் தொழில் நுட்ப பூங்காவில் தீ விபத்து
X

படவிளக்கம் : குமாரபாளையம் அருகே வளையக்காரனூர், காவேரி உயர் தொழில்நுட்ப பூங்காவில் தீ விபத்து ஏற்பட்டது.

குமாரபாளையம் அருகே உயர் தொழில் நுட்ப பூங்காவில் தீ விபத்து ஏற்பட்டது.

உயர் தொழில் நுட்ப பூங்காவில் தீ விபத்து

குமாரபாளையம் அருகே உயர் தொழில் நுட்ப பூங்காவில் தீ விபத்து ஏற்பட்டது.

குமாரபாளையம் அருகே வளையக்காரனூர், காவேரி உயர் தொழில்நுட்ப பூங்காவில், நேற்று மாலை 04:00 மணியளவில் குளிர் சாதன கருவியில் உள்ள ஸ்பான்ச் எனப்படும் பஞ்சு போன்ற பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மேல் தளத்தில் தீ பரவியது. இது குறித்து குமாரபாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தர, நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நேரில் வந்த அவர்கள், தண்ணீர் பீய்ச்சியடித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். குளிர்சிக்காக மேலே போடப்பட்ட அட்டைகள் அகற்றப்பட்டு தண்ணீர் ஊற்றி முற்றிலுமாக தீ அணைக்கப்பட்டது. இதில் ஜவுளி உள்ளிட்ட எந்த பொருட் சேதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

குமாரபாளையம் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் நடந்தது.

குமாரபாளையம் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி, நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் தீ விபத்து ஏற்பட்டால், அதிலிருந்து பாதிக்கப்பட்ட நபரை மீட்பது எப்படி, கேஸ் சிலிண்டர் கையாளும் முறை, உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தீயணைப்பு படையினர் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் மாணவ, மாணவியர், ஆசிரிய பெருமக்கள் பெருமளவில் பங்கேற்று பயன் பெற்றனர். அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ஓவியப்போட்டிகள் வைக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!