புனித ஜெப மாலை அன்னை ஆலய தேர்த்திருவிழா!
படவிளக்கம்: குமாரபாளையம் நடராஜா நகர் புனித ஜெப மாலை அன்னை ஆலய தேர்த்திருவிழா நடந்தது.
புனித ஜெப மாலை அன்னை ஆலய தேர்த்திருவிழா
குமாரபாளையத்தில் புனித ஜெப மாலை அன்னை ஆலய தேர்த்திருவிழா நடந்தது. குமாரபாளையம் நடராஜா நகர் புனித ஜெப மாலை அன்னை ஆலய தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான தேரோட்டம் பங்கு தந்தை பெலவேந்திரம் தலைமையில் நடந்தது. நடராஜா நகர், கம்பன் நகர், திருவள்ளுவர் நகர், ஓலப்பாளையம், சேலம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக தேர்த்திருவிழா நடந்தது. இதில் அன்னை மாதா மின்னொளி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பொங்கல் மந்திரித்தல், கூட்டுப்பாடல் திருப்பலி, நன்றி திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
தேரோட்டத்தில் பெண்கள், ஆண்கள், சிறார்கள் பெருமளவில் பங்கேற்று மாதா, இயேசு புகழ் பாடும் பக்தி பாடல்கள் பாடியவாறு வந்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் மறைமாவட்ட முதன்மை குரு மைக்கேல்ராஜ் செல்வம், சேலம் மறை மாவட்ட ஆயர் அருள்செல்வம் இராயப்பன் பங்கேற்று அருளாசி வழங்கினர். வழி நெடுக மத வேறுபாடு இல்லாமல் பொதுமக்கள் தேர் வரும் பாதையில் தண்ணீர் ஊற்றி, வணங்கினர்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் சர்வ மதத்தினரும் வழிபடும் ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள், ஆண்டுதோறும் பெருவிழாவாக 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். இந்த ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்ததே ஓர் அற்புத நிகழ்வாகும். 17-ம் நூற்றாண்டின் மத்தியில் சீனாவில் உள்ள மாக்கோயிலிருந்து போர்த்துக்கீசிய வியாபாரக் கப்பல் ஒன்று இலங்கையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திடீரெனத் தாக்கிய புயலால் நிலை குலைந்தது. `திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை' என்பார்கள்.
கப்பல் கடலில் மூழ்கிவிடாமல் இருக்க மாலுமிகளும் கப்பல் ஊழியர்களும் மரியாவிடம் 'தங்களைக் காப்பாற்றுமாறும், உயிருடன் நாங்கள் கரை சேருமிடத்தில் கன்னி மரியாவுக்கு ஆலயம் ஒன்றை அமைத்துத் தருவதாகவும்' வேண்டிக்கொண்டனர். மாதாவின் கருணையால் அந்தக் கப்பல் பத்திரமாக வேளாங்கண்ணியில் கரை சேர்ந்தது. உயிரைக் காப்பாற்றிய நன்றிக் கடனுக்காகப் போர்த்துக்கீசியர்களால் சிறிய மாதா ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டது (இன்றும் அது பழைய மாதா கோயில் என்றழைக்கப்படுகிறது).
அதன் பின் மாதா மீது நம்பிக்கை கொண்ட பக்தர்களின் காணிக்கையால் இன்று பேராலயமாகவும் தியானக் கூடமாகவும், பல்வேறு கட்டடங்களாவும் உயர்ந்து நிற்கிறது. இங்குள்ள மாதாவை நாடி வருபவர்களின் மனக் குறைகளையும் உடற்பிணிகளையும் அகற்றி மாதா பல அற்புதங்கள் நிகழ்த்துவதாகப் பக்தர்கள் நம்புகின்றனர். அதனால் ஜாதி, மதங்கள் கடந்து அனைவரும் வழிபடும் கருணை மிகுந்த ஆலயமாக இது திகழ்கிறது.
இங்கு நடைபெறும் தேர்பவனி மிகவும் பிரசித்தி பெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu