குமாரபாளையத்தில் திருமணமாகி ஒரு வருடத்தில் பெண் இறப்பு, போலீஸ் விசாரணை

குமாரபாளையத்தில் திருமணமாகி ஒரு வருடத்தில்  பெண் இறப்பு, போலீஸ் விசாரணை
X

பைல் படம்

குமாரபாளையத்தில் திருமணமாகி ஒரு வருடத்தில் உடல் நலமின்றி பெண் இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருச்சி அருகே முசிறியை சேர்ந்தவர் திவ்யா, இவருக்கும் குமாரபாளையம் அருகே உள்ள கல்லங்காட்டுவலசு பகுதியை சேர்ந்த செல்வம், ஒரு வருடம் முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இருவரும் அதே பகுதியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் கூலி வேலை செய்து வந்தனர். நேற்று காலை 06:00 மணியளவில் உடல் நலமில்லை என்று கூறியதால், அவரை ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு செல்வம் அழைத்து வந்துள்ளார்.

இவரை பரிசோதித்த டாக்டர் திவ்யா இறந்ததாக கூறினார். இது பற்றி குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருமணம் முடிந்து 6 வருடம் ஆகத நிலையில் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்வார் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு