குமாரபாளையத்தில் பயிர்கடனுக்காக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

குமாரபாளையத்தில் பயிர்கடனுக்காக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
X

குமாரபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன் பயிர்கடன் வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர்.

குமாரபாளையத்தில் பயிர்கடன் வழங்க கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த ஆண்டு பயிர்க்கடன் வழங்கியது போல் அனைத்து விவசாயிகளுக்கும் இந்த ஆண்டும் பயிர்க்கடன் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலர் பெருமாள் தலைமை தாங்கினார்.

இதுகுறித்து பெருமாள் கூறுகையில், குமாரபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த ஆண்டு 685 நபருக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டது. மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டு இரண்டு மாதங்கள் முடிந்தும் இதுவரை பயிர்க்கடன் வழங்கவில்லை. விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர்கடன் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் பயிர்க்கடன் கொடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என அவர் கூறினார்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராஜு, விவசாயிகள் சங்க தலைவர் பெருமாளிடம் நேரில் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியபின் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டது.

Tags

Next Story
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் இளைஞரணி துணைச் செயலாளர்  செந்தில் முருகன்!