குமாரபாளையம் அரசு பி.எட் கல்லூரியில் கண், பல், பொது மருத்துவ முகாம்
குமாரபாளையம் அரசு பி.எட் கல்லூரியில் மாணவ, மாணவியருக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு பி.எட் கல்லூரியில் ஆண்டுதோறும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுவது வழக்கம். நேற்று இந்த கல்லூரியில் கண், பல், பொது மருத்துவ இலவச சிகிச்சை முகாம் முதல்வர் ஜான் பீட்டர் தலைமையில் நடைபெற்றது.
இதில் 102 மாணவியர், 98 மாணவர்கள், 15 பேராசிரியர்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர்கள் கண் பரிசோதனையும், ஸ்ரீகலா பல் மருத்துவமனை டாக்டர்கள் பற்கள் பரிசோதனையும் செய்ததுடன், பீவேல் மருத்துவமனை டாக்டர்கள் பொது சிகிச்சை குறித்து பரிசோதித்து ஆலோசனை வழங்கினர்.
கணித மன்ற தொடக்க விழா
குமாரபாளையம் அரசு பி.எட்.கல்லூரியில் கணித மன்ற தொடக்க விழா மற்றும் கணித மேதை ராமானுஜம் பிறந்த நாள் விழா முதல்வர் ஜான் பீட்டர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை கல்லூரி கணிதவியல் துறை உதவி பேராசிரியர் வடிவேல் பங்கேற்று கணிதத்தின் முக்கியத்துவம், கணித உயர் கல்விக்கான ஆலோசனை, பணி வாய்ப்புகள் குறித்து பேசினார்.
ராமானுஜம் வாழ்க்கை குறித்து மாணவர்கள் சரவணன், வெங்கடேசன் பேசினார்கள். வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கணித முக்கியத்துவம் குறித்த நாடகம் நடைபெற்றது. கணித துறை தலைவி தீபா, உதவி பேராசிரியை சுமதி விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர். ராமானுஜம் குறித்த திரைப்படம் காண்பிக்கப்பட்டது. கணிதவியல் மன்ற நிர்வாகிகள் கோபிநாத், நாராயணன், பர்ஹானா, முபீனா, சவுமியா உள்பட பலர் பங்கேற்றனர்..
எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்
குமாரபாளையம் அரசு பி.எட்.கல்லூரியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். இதில் பள்ளிபாளையம் வட்டார அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் 268 பேர் பங்கேற்றனர்.
இது பற்றி மகேஸ்வரி கூறுகையில், அரசு பள்ளிகளில் 2ம் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதால், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு எழுத்தும் பயிற்சி முகாம் 15 வகுப்புகளில் நடைபெற்றது. குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் தேங்கியுள்ளது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் அதற்கான தீர்வு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu