/* */

இளைஞர் வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை: சுயேச்சை வேட்பாளர் ஓம்சரவணா உறுதி

இளைஞர் வேலை வாய்ப்பு பெறும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்படும் என்று சுயேச்சை வேட்பாளர் ஓம் சரவணா உறுதி அளித்தார்.

HIGHLIGHTS

இளைஞர் வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை:  சுயேச்சை வேட்பாளர் ஓம்சரவணா உறுதி
X

குமாரபாளையம் தொகுதியில் வைரம் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஓம்சரவணா நகரப்பகுதியில் வீதி,வீதியாகவும், கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.


நேற்று குமாரபாளையம் நகராட்சிப்பகுதியிலுள்ள அம்மன் நகர், நாராயணா நகர் மற்றும் ஓடக்காடு ஆகிய பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்பகுதி பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது அவர்கள் மத்தியில் அவர் கூறியதாவது, ' குமாரபாளையம் தொகுதியில், விசைத்தறி, கோழி வளர்ப்பு, கனரக பாடி பில்டிங், சாகோ உற்பத்தி ஆகிய துறைகளில் திறன் பயிற்சி மையங்கள் அமைக்க முயற்சி மேற்கொள்வேன்.

தொகுதியில் இளைஞர்களுக்கு மென்திறன் பயிற்சி வழங்குவதற்காக நிறுவனம் அமைக்க முற்படுவேன். உள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலகங்களை உருவாக்கி,அந்த அலுவலகங்களுடன் இணைந்து செயல்படும் வகையில் புதிய நிறுவனங்களுடன் இணைந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்வேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன்களை வழங்குவதில் திறன் துறை சார்ந்த கவுன்சில்கள் அமைப்பதற்கு நான் பணியாற்றுவேன்.

உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் இளைஞர்களுக்குதொழில் ஆலோசனை கொடுத்து, அவர்கள் விரும்பும் துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி அறிய முகாம்கள் அமைக்கப்படும். ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிக்கு போதுமான பணியாளர்கள் மற்றும் அக்கல்லூரி தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்வேன். குமாரபாளையம் தொகுதி தொழில் துறை மற்றும் சமூக,பொருளாதார வளர்ச்சியில் மேம்பட, பொதுமக்கள் எனக்கு வைரம் சின்னத்தில் வாக்களித்து, மாபெரும் வெற்றி பெறச் செய்யவேண்டும்.

தொகுதிக்கு நான் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம்நிறைவேற்றுவேன் என உறுதியளித்தார். பொதுமக்கள் சார்பில் அவர்கள் கூறும்போது, 'மறைந்த கொடைவள்ளல் ஜே.கே.கே.நடராஜா ஐயா தொழில்துறை மற்றும் கல்வித்துறையில் செய்துள்ள சேவைகள் பற்றி எங்களுக்கு தெரியும். அதுமட்டுமல்லாது நம்ம குமாரபாளையம் என்ற சேவை அமைப்பை தொடங்கி 4 ஆண்டுகளாக குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளைய சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருவதும் நாங்கள் அறிந்ததே. எனவே, எங்கள் வாக்கு நிச்சயம் உங்களுக்கே என்று உறுதி கூறினர்.

Updated On: 2 April 2021 4:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  2. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  4. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  5. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  6. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  7. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  8. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  9. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
  10. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...