'என் வாக்குறுதி கல்லில் பதித்த எழுத்துக்கள்': குமாரபாளையம் சுயேச்சை வேட்பாளர் நெகிழ்ச்சி

என் வாக்குறுதி கல்லில் பதித்த எழுத்துக்கள்:  குமாரபாளையம் சுயேச்சை வேட்பாளர் நெகிழ்ச்சி
X
'என் வாக்குறுதி கல்லில் பதித்த எழுத்துக்கள். நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று சுயேச்சை வேட்பாளர் நெகிழ்ச்சி அடைந்தார்.

குமாரபாளையம் தொகுதியில் வைரம் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஓம்சரவணா கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் நடந்தே சென்று நேரில் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்கிறார்.நேற்று பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியிலும், காவேரி ஆர்.எஸ் பகுதிக்கும் சென்றார். அப்போது அப்பகுதி பெண்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பின்னர், சுயேச்சை வேட்பாளர் ஓம் சரவணா அவர்கள் மத்தியில் கூறியவதாவது, ' தொகுதியில் "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டித்தருவேன். தகுதியானவர்களுக்கு முத்ரா திட்டம், NEEDS திட்டங்களின் மூலம் வங்கிக்கடன் ஏற்பாடு செய்து தருவேன். நான் தொகுதிக்கு கொடுத்துள்ள அத்தனை வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவேன். என் வாக்குறுதிகள் கல்லில் எழுதிய எழுத்துக்கள்.' என்று உறுதி அளித்தார்.

பொதுமக்கள் தரப்பில், 'உங்களைப் பற்றியும், உங்கள் குடும்ப பின்னணிப்பற்றியும் எங்களுக்கு நன்றாக தெரியும். நீங்கள் என்னென்ன சேவைகளை செய்துள்ளீர்கள் என்பதும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். உங்களின் தாத்தா ஜே.கே.கே.நடராஜா அவர்கள் தொழில் துறையிலும், கல்வித்துறையிலும் செய்த சேவைகள் மறக்க முடியாதது.

அதேபோல நீங்கள் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதி மக்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்க நிறைய செய்ததும் எங்களுக்கு தெரியும். அதனால், எங்கள் ஓட்டு உங்களுக்குத்தான் என்று உறுதியாக கூறினார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!