'நம்மில் ஒருவர் எம்எல்ஏவாக வரவேண்டும்' குமாரபாளையம் சுயேச்சை வேட்பாளர் பிரசாரம்

நம்மில் ஒருவர் எம்எல்ஏவாக வரவேண்டும்   குமாரபாளையம் சுயேச்சை வேட்பாளர் பிரசாரம்
X
நம்மில் ஒருவர் எம்எல்ஏவாக வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து குமாரபாளையம் சுயேச்சை வேட்பாளர் பிரசாரம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளராக ஜே கே கே நடராஜா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் ஓம் சரவணா போட்டியிடுகிறார். தனது பா.ஜ.க பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் நலனுக்காக சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்து குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இடங்களில் மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

'நம்மில் ஒருவர் எம்.எல்.ஏவாக உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் மக்களை சந்தித்து சுயேட்சை வேட்பாளர் ஓம் சரவணா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று தட்டான்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் காலனி, ஓலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று சட்டமன்ற தேர்தலில் தனக்கு வாய்ப்பு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

தன்னை வெற்றிபெறச் செய்தால் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு தேவையான வளர்ச்சிப் பணிகளை செய்து தருவதுடன் குமாரபாளையத்தில் தொழில் முனைவோர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

பின்னர் மாலையில் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட சுந்தரம் காலனியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குமாரபாளையத்தை குபேரபாளையமாக மாற்றம் செய்வேன் என்று வாக்கு கேட்பது அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர் ஓம் சரவணாவிற்கு கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் ஆதரவையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!