குமாரபாளையத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி !

குமாரபாளையத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி !
X

படவிளக்கம் : குமாரபாளையத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

குமாரபாளையத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தேர்தல் விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

லோக்சபா தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்திட வேண்டும், ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி குமாரபாளையம் நகராட்சி முன்பு துவங்கியது., தாசில்தார் சண்முகவேல் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் குமரன் கொடியைத்து பேரணியை துவக்கி வைத்தார். மகளிர் திட்ட இயக்குனர் செல்வராஜ், தேர்தல் பார்வையாளர் ராஜேஷ் கண்ணன் பங்கேற்று, விழிப்புணர்வு கருத்துகள் கூறி, வாழ்த்தி பேசினார்கள். கலைமகள் வீதி, சேலம் சாலை, இடைப்பாடி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியாக சென்ற பேரணி, பஸ் ஸ்டாண்ட் வளாகம், அம்மா உணவகம் முன்பு நிறைவு பெற்றது. அங்கு வைக்கபட்ட போர்டில், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தி அனைவரும் கையொப்பமிட்டனர். இதில் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்று, தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாதைகள் கைகளில் ஏந்தியபடியும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தபடியும், கோஷங்கள் போட்டபடியும் பங்கேற்றனர். நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, கல்லூரி முதல்வர் விஜயகுமார், மகளிரணியினர் உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் நாட்டிற்கான எனது முதல் வாக்கு எனும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப். 19ல் நடக்கவுள்ளது. அனைத்து அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். குமாரபாளையம் தாலுக்கா அலுவலக தேர்தல் பிரிவு சார்பில், வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு, ஓட்டுச்சாவடிகள் தயார் நிலையில் வைத்தல், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமித்தல், என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இதன் ஒரு கட்டமாக இந்த தேர்தலில் முதல் ஓட்டு போடும், நபர்களுக்காக, நாட்டிற்கான எனது முதல் வாக்கு எனும் தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி, குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன் பங்கேற்று, வாக்களிப்பது நம் கடமை, வாக்களிக்காமல் இருத்தல் கூடாது, அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வாக்களிப்பது நமது கடமை என்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இதில் பங்கேற்ற இளைஞர்கள் தேர்தலில் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

உதவி தாசில்தார் செல்வராஜ், ஆர்.ஐ. புவனேஸ்வரி, வி.ஏ.ஓ.க்கள் முருகன், செந்தில்குமார், தியாகராஜன், ஜனார்த்தனன், ரஞ்சித்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!