இல்லம் தேடி கல்வி இசை வெளியீட்டு விழா

இல்லம் தேடி கல்வி இசை  வெளியீட்டு விழா
X

குமாரபாளையத்தில் நடந்த இல்லம் தேடி கல்வி இசை வெளியீட்டு விழாவில் குப்பாண்டபாளையம் ஊராட்சி மன்ற தலைவி கவிதா மற்றும் எஸ்.எஸ்.எம். லட்சுமி அம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் ரவீந்திரன் பாடலை வெளியிட்டார்

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி இசை வெளியீட்டு விழா நடைபெற்றது

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி இசை வெளியீட்டு விழா நடந்தது.

குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் சிறக்க, மணி கிருஷ்ணா இசையில் உருவான பாடல் வெளியீட்டு விழா விடியல் ஆரம்பம் சார்பில் நடந்தது. மாணவர்கள் இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு சிறப்பாக வருகை தருவதற்கு இப்பாடல் உருவாக்கப்பட்டது.

இப்பாடலை குப்பாண்டபாளையம் ஊராட்சி மன்ற தலைவி கவிதா மற்றும் எஸ்.எஸ்.எம். லட்சுமி அம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் ரவீந்திரன் பாடலை வெளியிட்டார்கள். இல்லம் தேடி கல்வித் திட்டம் சிறப்புகளையும் அதன் அவசியத்தையும் மாணவர்களிடையே இல்லம் தேடி கல்வி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விடியல் பிரகாஷ் பேசினார்.

இப்பாடலுக்கு சரவணன் பிரியன் பாடல் எழுதி, மணி கிருஷ்ணன் இசையமைப்பில் சபிக் பாடியுள்ளார். மேலும் விழாவில் வேலுமணி, லதா, அண்ணாதுரை, பணியாளர்கள் செந்தில்குமார் மற்றும் சுந்தர்ராஜ் குப்பாண்டபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மரகதவல்லி, மாணவ மாணவிகள், ஆசிரிய பெருமக்கள் மற்றும் அக்னி சிறகுகள் சீனிவாசன், தீனா பங்கேற்றனர்.


Tags

Next Story
ai in future agriculture