வடிகால்களில் சாயக்கழிவு: விழித்துக்கொள்ளுமா மாசுக்கட்டுபாட்டு வாரியம்?
குமாரபாளையம் இடைப்பாடி சாலை, பத்ரகாளியம்மன் கோவில் வடிகாலில், சாயக்கழிவு நீர் தினமும் வெளியேறி வருகிறது.
குமாரபாளையம் விசைத்தறி, கைத்தறி தொழில் மிகுந்த நகரம். இங்கு, 500க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களும், 100க்கும் மேற்பட்ட கைத்தறி கூடங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில் தயாரிக்கப்படும் ஜவுளிகளுக்கு தேவையான நூல்களுக்கு, சாயம் போடுவதற்கு, இப்பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் செயல்பட்டு வந்தன.
மாசுக்கட்டுபாட்டு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கையால், அனுமதி பெறாத சாயப்பட்டறைகள் நிறுத்தப்பட்டன. இருப்பினும் குமாரபாளையம், இடைப்பாடி சாலை, பத்ரகாளியம்மன் கோவில் வடிகால், சேலம்- கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு, ஊராட்சி சிறுவர் பூங்கா பகுதியில் உள்ள வடிகால்களில் சாயக்கழிவு நீர் தினமும் வெளியேறி வருகிறது.
இதனால் காவிரி ஆற்றில் உள்ள நீர், மாசு ஏற்பட்டு குடிநீர் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது. பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட இதுவும் காரணமாக அமைகின்றது. எனவே, விதி மீறும் சாயப்பட்டறை மீது, மாசுக்கட்டுபாட்டு வாரியம் விழித்துக் கொண்டு, இனியாவது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu