குமாரபாளையத்தில் பகலில் பெய்த மழையால் வியாபாரிகள் கலக்கம்

குமாரபாளையத்தில் பகலில் பெய்த மழையால் வியாபாரிகள் கலக்கம்
X

குமாரபாளையத்தில் நேற்று பகலில் பெய்த மழை.

Heavy Rain News -குமாரபாளையத்தில் பகலில் பெய்த மழையால் வியாபாரிகள் கலக்கமடைந்தனர்.

Heavy Rain News -குமாரபாளையத்தில் நேற்று பகலில் மேகமூட்டமாகவும், குளிச்சியான சூழ்நிலையும் நிலவி வந்தது. இதனைத்தொடர்ந்து மாலை 03:00 மணிக்கு மழை துவங்கியது.

தீபாவளி சீசன் முடிந்து தற்போதுதான் வியாபாரம் துவங்கி வரும் நிலையில், இந்த மழையால் சாலையோர வியாபாரிகள் உள்பட பலரும் பாதிப்புக்கு ஆளாகினர். வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். கோம்பு பள்ளத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது.

சேலம் சாலையில் மழைநீர் செல்ல வழியின்றி குளம் போல் தேங்கியதால், வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டது.

மழை நீர் பாதிப்பு பகுதியில் சேர்மன் ஆய்வு

குமாரபாளையம் அருகே ஓலப்பாளையம் ஏரி நேற்றுமுன்தினம் பெய்த மழையில் நிரம்பி உபரி நீர் கம்பன் நகர், பெரியார் நகர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முருங்கைக்காடு, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் நுழைந்தது.

இந்த பகுதிகளில் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் நேரில் ஆய்வு செய்து பெண்கள் பள்ளி, வீடுகளில் உள்ள நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டன. தாசில்தார் தமிழரசி உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மழை வெள்ள சேத மதிப்பு கணக்கீடு செய்தனர். இவருடன் கமிஷனர் (பொ) ராஜேந்திரன், கவுன்சிலர் ஜேம்ஸ், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், சரவணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

உயிர் பிழைத்த தொழிலாளர்கள்

குமாரபாளையம் அருகே கோட்டைமேடு பகுதியில் வசிப்பவர் யுவராஜ், 45. இவர் 10 விசைத்தறிகள் வைத்துக்கொண்டு ஜவுளி உற்பத்தி தொழில் செய்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு 10:00 மணியளவில் வேலை முடிந்து தொழிலாளர்கள் வீட்டுக்கு சென்றனர். தொடர்மழை பெய்து கொண்டிருந்ததால், இவரது விசைத்தறி கூடம் சுவர் மண்ணால் ஆனது என்பதால், மழை நீரில் ஊறிய நிலையில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் விசைத்தறிகள், மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகள் சேதமடைந்தன. ஆட்கள் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல் போனது.

நடைமேடை பணிகளால் குளமாகிய சாலைகள்

குமாரபாளையத்தில் சேலம் சாலையில் கத்தேரி பிரிவு முதல் போலீஸ் ஸ்டேஷன் வரை வடிகால் அமைக்கப்பட்டு, நடைமேடை அமைக்கும் பணி பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று மாலை 02:00 மணியளவில் கன மழை பெய்தது. இதனால் சேலம் சாலை உள்ளிட்ட பல சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

சேலம் சாலையில் ஒ.வி.கே. பெட்ரோல் பங்க், பஸ்கள் வெளியில் வரும் பகுதி, ஜே.கே.கே. பங்களா எதிரில், ஆனங்கூர் பிரிவு சாலை, சரவணா தியேட்டர் அருகில் உள்ளிட்ட நடைமேடை அமைத்த பகுதிகளில் மழைநீர் வடிகாலில் சேர வழியின்றி குளம் போல் தேங்கி நின்றது. இதனால் சாலையில் சென்ற வாகனங்களால் தண்ணீர் தெறிக்க, அருகில் உள்ள வியாபார நிறுவனத்தார்கள், டூவீலர் மற்றும் நடந்து செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

மழை நின்ற பின் தேங்கிய மழைநீர் சேரும் சகதியுமாக மாறி, பெறும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் இது குறித்து கவனம் செலுத்தி, மழை நீர் சாலையில் தேங்காமல், அனைத்து நீரும் வடிகாலில் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மழை நீரில் மிதந்த பள்ளிபாளையம்

பருவ மழைக்காலம் நடந்து வரும் வேளையில் நாமக்கல். சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பழ மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கன மழை பெய்ததில், சாலையில் மழை நீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. காவிரி பாலம், பஸ் ஸ்டாண்ட், ஓட்ட மெத்தை, திருச்செங்கோடு சாலை, உள்ளிட்ட பகுதிகள் மழைநீரில் மிதந்தன. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து செல்லும் நிலை உருவானது. பள்ளமான இடங்களில் சிக்கிகொண்ட பொதுமக்களை மேடான பகுதிகளுக்கு வெப்படை தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

3 மணி நேரம் பெய்த கன மழை

நேற்று மாலை 07:00 மணியளவில் கன மழை பெய்தது. இதனால் சேலம் சாலை உள்ளிட்ட பல சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. சேலம் சாலையில் ஒ.வி.கே. பெட்ரோல் பங்க், பஸ்கள் வெளியில் வரும் பகுதி, ஜே.கே.கே. பங்களா எதிரில், ஆனங்கூர் பிரிவு சாலை, சரவணா தியேட்டர் அருகில் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகாலில் சேர வழியின்றி குளம் போல் தேங்கி நின்றது. இதனால் சாலையில் சென்ற வாகனங்களால் தண்ணீர் தெறிக்க, அருகில் உள்ள வியாபார நிறுவனத்தார்கள், டூவீலர் மற்றும் நடந்து செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டனர். மழை நின்ற பின் தேங்கிய மழைநீர் சேரும் சகதியுமாக மாறி, பெறும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. கோம்பு பள்ளத்தில் வெள்ளமென மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!