மழையால் தணிந்த வெப்பம் பொதுமக்கள் மகிழ்ச்சி

மழையால் தணிந்த வெப்பம்  பொதுமக்கள் மகிழ்ச்சி
X

குமாரபாளையத்தில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

குமாரபாளையத்தில் பெய்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

குமாரபாளையத்தில் பெய்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. குமாரபாளையத்தில் பெய்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

குமாரபாளையத்தில் சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். அத்துடன் அடிக்கடி ஏற்படும் மின்தடையால், கோடை வெப்பம் தாங்காமல் கர்ப்பிணிகள் உள்ளிட்ட பலரும் தவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 7:30 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இரவு முழுவதும் கனமழை பெய்ததுடன், நேற்று மாலை வரையில் மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மழையின் தாக்கத்தால், மேகமூட்டம் இருந்ததால், குளிர்ச்சியான சூழ்நிலை நீடித்தது. குமாரபாளையத்தில் பெரும்பாலான விசைத்தறி பட்டறைகள் சிமெண்ட் அட்டை போடப்பட்டதாக உள்ளது. கடும் வெயிலால், இதில் பணியாற்றும் விசைத்தறி தொழிலாளர்கள், வெப்பத்தில் மிகவும் சிரமப்பட்டு பணியாற்றி வந்தனர்.நேற்று வெயிலின் தாக்கம் இல்லாமல் குளிர்ச்சி நிலவியதால் விசைத்தறி தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் பணியாற்றினார்கள்.

பலத்த மழையால், சேலம் சாலை, எடப்பாடி சாலை, பள்ளிபாளையம் சாலை உள்ளிட்ட பல சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பஸ் ஸ்டாண்ட் அருகே கோம்பு பள்ளத்தில் அதிக நீர் ஓடியது. குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பெய்த மழையால், கழிவுநீர் குழாய் அடைப்பு ஏற்பட்டு, குழாய் வழியாக செல்ல வேண்டிய கழிவுநீர் பஸ் ஸ்டாண்ட் கடைகளின் வழியாக ஓடியது.



Tags

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை