மழையால் தணிந்த வெப்பம்:பொதுமக்கள் மகிழ்ச்சி

மழையால் தணிந்த வெப்பம்:பொதுமக்கள் மகிழ்ச்சி
X

குமாரபாளையத்தில் பெய்த மழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

குமாரபாளையத்தில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

குமாரபாளையத்தில் பெய்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

குமாரபாளையத்தில் சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அடிக்கடி ஏற்படும் மின்தடையால், வெப்பம் தாங்காமல் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பலரும் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மாலை 3:30 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் 3 மணிநேரம் நீடித்தது.

சேலம் சாலை, எடப்பாடி சாலை, பள்ளிபாளையம் சாலை உள்ளிட்ட பல சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பஸ் ஸ்டாண்ட் அருகே கோம்பு பள்ளத்தில் அதிக நீர் ஓடியது. கார்த்திகை தீபத்திருவிழா சமயத்தில் துணிக்கடை, நகைக்கடைகளில் வியாபாரம் களை கட்டிய நேரத்தில் மழை வந்ததால், வியாபாரம் பாதித்தது. சாலையோர வியாபாரிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

கடும் வெயில்வாட்டி வதைத்து வந்தது சாலையோர தள்ளு வண்டி, ஜவுளிக்கடை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வெப்பத்தால் கடும் அவதிப்பட்டு வந்தனர். சில நாட்கள் கடந்த நிலையில் சிறிது, சிறிதாக வெப்பத்தின் தாக்கம் குறைய தொடங்கியது. நேற்று பெய்த மழையால் தற்போது குமாரபாளையத்தில் வெப்ப சீதோஷ்ண நிலை மாறி, மேகமூட்டத்துடன் கூடிய குளிர்ச்சியான நிலை இருந்து வருகிறது. மாலை 4 முதல் லேசான சாரல் மழை துவங்கி கன மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனர்.

படவிளக்கம் :

குமாரபாளையத்தில் நேற்று மாலை கன மழை பெய்தது.

Tags

Next Story
பாஜக வக்ஃப் சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற திட்டம் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கண்டனம்