பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட டி.எஸ்.பி., நீதிமன்றத்தில் ஆஜர்

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட டி.எஸ்.பி., நீதிமன்றத்தில் ஆஜர்
X

குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றம்.

நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத டி.எஸ்.பி., குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

குமாரபாளையம் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத டி.எஸ்.பி. குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

திருநெல்வேலியில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருபவர் சுரேஷ்குமார். இவர் குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சமயத்தில், 2006ம் ஆண்டு பதியப்பட்ட 2 வழக்கில் சாட்சியம் அளிக்க, குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றம் சார்பில் பலமுறை சம்மன்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

மார்ச் 29ம் தேதிய விசாரணைக்கும், ஏப். 7ம் தேதி விசாரணைக்கும் ஆஜராகாததால், நீதிபதி சப்னா, டி.எஸ்.பி. சுரேஷ்குமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்திரவிட்டார். இதன்படி டி.எஸ்.பி. சுரேஷ்குமார் குமாரபாளையம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். அடுத்த வழக்கு விசாரணை மே 10ல் நடைபெறவுள்ளது.

Tags

Next Story
ai marketing future