குமாரபாளையத்தில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்ட டிஎஸ்பி

குமாரபாளையத்தில் பதற்றமான ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்ட டிஎஸ்பி
X

பதற்றமான வாக்குச்சாவடியை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் நேற்று பார்வையிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பையொட்டி குமாரபாளையத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளை டிஎஸ்பி பார்வையிட்டார்.

பாராளுமன்ற தேர்தல் ஏப். 19 வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அரசியல் கட்சியின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு வரும் சூழ்நிலையில், தற்பொழுது குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 279 வாக்குச்சாவடி மையங்களில் 21 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என சட்டமன்றத் தேர்தலில் கண்டறியப்பட்டு அவற்றிற்கு கூடுதல் பாதுகாப்புகள் வழங்கப்பட்டிருந்தது.

அதனையொட்டி தற்பொழுது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்து அதற்குரிய பாதுகாப்பு பணிகளில் ஈடுபட திருச்செங்கோடு மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் நேற்று பார்வையிட்டார்.

குமாரபாளையம் அருகே உள்ள சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு கல்வியியல் கல்லூரி உள்ளிட்ட ஓட்டுச்சாவடி மையங்களை பார்வையிட்டு, அங்கு பணியாற்றும் அரசு ஊழியர்களிடம் ஆலோசித்தார்.

பார்வையிட்ட தகவல் குறித்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்து, அவர்களின் ஆலோசனைப்படி பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் கூறினர். தேர்தல் நடவடிக்கையின் ஒரு கட்டமாக நகரில் உள்ள கொடிக்கம்பங்கள், கட்சி போர்டுகள் அகற்றப்பட்டன.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!