குமாரபாளையத்தில் விநாயகர் சிலைகள் வைக்க டி.எஸ்.பி. தலைமையில் ஆலோசனை கூட்டம்
குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் டி.எஸ்.பி. இமயவரம்பன் தலைமையில் நடந்தது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் டி.எஸ்.பி. தலைமையில் நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நடைபெறவுள்ளது. குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் கொலு வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்து, கொலு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் விட்டு வருவது வழக்கம். விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய குமாரபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் டி.எஸ்.பி. இமயவரம்பன் தலைமையில் நடந்தது. இவர் கூறியதாவது:
சிலைகள் பீடத்துடன் சேர்த்து 10 அடிகள் வரை மட்டும் இருக்க வேண்டும், சிலைகள் வைக்கும் இடத்தின் உரிமையாளர் அனுமதி பெற வேண்டும், மின் திருட்டில் ஈடுபட கூடாது. பிளாஸ்டிக், மற்றும் ரசாயன கலவையால் ஆன சிலைகள் வைக்க கூடாது, ஜெனரேட்டர் வைக்க வேண்டும், எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் சிலை அருகில் வைக்க கூடாது, தீப்பற்றாத பந்தல் அமைக்க வேண்டும், பிற மதத்தினர் கோவில்கள், பள்ளிகள் அருகில் வைக்க கூடாது, கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அமைக்க கூடாது, பெட்டி வடிவிலான ஒலி பெருக்கிகள் மட்டும் வைக்க வேண்டும், விநாயகர் ஊர்வலங்கள் பிற மத கோவில்கள் வழியாக வரக்கூடாது, விழாக்குழுவினர் பாதுகாப்பு குழு அமைத்து சிலை பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல், எஸ்.எஸ்.ஐ. குணசேகரன், ராம்குமார், மாதேஸ்வரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu