அரசு பள்ளிகள் சார்பில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையம் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதை பொருட்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பாக போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பாக போதை விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை குமாரபாளையம் எஸ்.ஐ. சந்தியா கொடியசைத்து துவக்கி வைத்தார். தலைமையாசிரியர்கள் ஆடலரசு மற்றும் தமிழீ ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் என்.சி.சி அலுவலர் அந்தோணிசாமி, சாரணர் இயக்க ஆசிரியர் சரவணன், செஞ்சிலுவை சங்கம் ஆசிரியர் கார்த்தி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மணி, சாலை பாதுகாப்பு ஆசிரியர் ராஜா, கீதா, சிவமணி சித்ரா மற்றும் ஆசிரியர்கள் கவிராஜ், தமிழரசன், அர்த்தநாரீஸ்வரர் மற்றும் இருபாலா ஆசிரியர் பெருமக்கள் பங்கேற்றனர்.
என்.சி.சி, சாரண சாரணிய இயக்கம், செஞ்சிலுவை சங்கம், சாலை பாதுகாப்பு சங்கம், நாட்டு நலப்பணி திட்டம், தேசிய பசுமை படை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பேரணியில் பங்கேற்றனர்.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி, பள்ளி சாலை, சத்யாபுரி, பெரந்தர் காடு, வார சந்தை வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் பதாகைகள் ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும்பொது மக்களிடையே போதை பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu