குமாரபாளையம் அருகே குவாரி தண்ணீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

குமாரபாளையம் அருகே குவாரி தண்ணீரில் மூழ்கி   மாணவன் உயிரிழப்பு
X

பைல் படம்

குமாரபாளையம் அருகே குவாரி தண்ணீரில் மூழ்கி 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே சன்னியாசிபட்டி பகுதியை சேர்ந்தவர் கவின், (வயது 16). கவின் படைவீடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கவின், தன்னுடன் படிக்கும் நண்பர்களான பிரதீப், கதிரேசன், ரகுபதி ஆகிய நால்வரும், நேற்று மாலை 05:00 மணியளவில் பச்சாம்பாளையம் அருகே அல்லிநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள குவாரியில் தேங்கியுள்ள நீரில் குளிக்க சென்றுள்ளனர்.

ஆழமான பகுதிக்கு சென்ற மாணவன் கவின் நீரில் மூழ்கி உயிரிழந்தான். இவரது உடல் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
ai in future agriculture