தி.க. சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

தி.க. சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம்
X

குமாரபாளையத்தில் நடந்த தி.க. பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமைக்கழக சொற்பொழிவாளர் பெரியார் செல்வம் பேசினார்.

குமாரபாளையத்தில் திராவிடர் கழகம் சார்பில் முப்பெரும் விழா பொதுக் கூட்டம் நடந்தது

குமாரபாளையத்தில் தி.க. சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

குமாரபாளையத்தில் தி.க. சார்பில், பெரியார் 145 வது பிறந்த நாள் விழா, வைக்கம் போரட்ட நூற்றாண்டு விழா, மற்றும் கருணாநிதி நூற்றாண்டு விழா ஆகியன முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. நகர தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.

பெரியாரின் திருவுருவப்படத்தினை நகர காங்கிரஸ் தலைவர் ஜானகிராமன், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படத்தினை,நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் திறந்து வைத்து பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக தலைமைக் கழக சொற்பொழிவாளர் பெரியார் செல்வம் பேசியதாவது: கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என்றும், சிலை ஏற்பாட்டு பொறுப்புகுழு நிர்வாகியாக நானே இருக்கிறேன் என்று பெரியார் கூறினார். ஒரு தேர்தலில் கூட தோல்வி பெறாத தலைவர் கருணாநிதி. ஒரு சொல்லில் பதில் சொல்லும் திறமை படைத்தவர் கருணாநிதி.இவ்வாறு அவர் பேசினார்.

நிர்வாகிகள் குமார், பெரியசாமி, சண்முகம், சாமிநாதன், புஷ்பா, ராஜி சி.பி.எம். சக்திவேல், நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன் கவுன்சிலர்கள் ஜேம்ஸ், கதிரவன், உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பொதுத்துறை வங்கி எழுத்தர் பணிக்கு தமிழ் கட்டாயம் இல்லை என அறிவித்து தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நகர தலைவர் சரவணன் தலைமையில் நடந்தது. மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன. இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள் செல்வம், ஞானசேகரன், ஜானகிராமன், சக்திவேல், கணேஷ்குமார், நீலகண்டன், சாமிநாதன், சுப்ரமணி, ஆறுமுகம், ராமநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சரவணன் பேசியதாவது: பொதுத்துறை வங்கி பணிகளில் எழுத்தராக சேர்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில மொழி தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் அது மாற்றம் செய்யப்பட்டது என்பது தெரியுமா? அதற்கான விளம்பரங்களில் பச்சையாக, மாநில மொழியில் தேர்ச்சி கட்டாயம் இல்லை, வெறும் முன்னுரிமை மட்டுமே என்று இடம் பெற்று இருப்பதை அறிவீர்களா? தமிழ்நாட்டு வங்கிகளில் ராஜஸ்தான், ஓடிஸா, போன்ற இதர மாநில இளைஞர்களை குவித்துக்கொண்டு உள்ளனர் என்பது தெரியுமா?.

2022, 2023 ஆண்டுகளுக்கான வங்கி கிளார்க் பணிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு 843 பேர் தமிழ்நாட்டில் நியமனம் செய்யப்பட்டனர். மாநில மொழி தெரியாதவர்களுடன் தமிழ் மட்டுமே தெரிந்த வாடிக்கையாளர்கள் எப்படி உரையாட நடத்துவார்கள்?என்பது தெரியுமா? ரயில்வே துறையில் தமிழ்நாட்டில் ஹிந்திகாரர்கள் குவிந்து கொண்டுள்ளனர். பயணசீட்டு வாங்கும் இடத்தில் பணியாற்றுவோர், டிக்கெட் பரிசோதகர்களுக்கு தமிழ் தெரியவில்லை. இந்நிலையில் தமிழ் மட்டும் தெரிந்த பயணிகள் நிலை என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?இவ்வாறு அவர் பேசினார்.



Tags

Next Story
சென்னிமலை தைப்பூச தேரோட்டத்திற்கு முன் பரபரப்பான பேனர் சர்ச்சை