சுதந்திர நாளையொட்டி வீடு வீடாக தேசியக் கொடி விநியோகம்

குமாரபாளையம் பா.ஜ.க சார்பில் சுதந்திர நாளையொட்டி வீடு, வீடாக தேசியக் கொடி விநியோகம் செய்தனர்.
இந்திய சுதந்திரதினவிழா கொண்டாடப்படுவதையொட்டி, குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் தங்கவேல் தலைமையில், நகரில் உள்ள அனைத்து வார்டுகளில் வீடு, வீடாக தேசியக்கொடிகள் வினியோகம் செய்யப்பட்டன. இதில் நிர்வாகிகள் பாலாஜி, தினேஷ், பத்மநாபன், கவுதம்,, அஜித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்திய தேசியக் கொடி அல்லது மூவர்ணக் கொடி என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், ஜூலை 22, 1947 அன்று ஏற்கப்பட்ட இந்திய நாட்டின் கொடியாகும். சனவரி 26, 1950-ல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது.
நீள்சதுர வடிவில் உள்ள இக்கொடியில், மேலிருந்து கீழாக, இளஞ்சிவப்பு, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், கடற்படை நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் எனக் கூறப்படும் 24 ஆரங்களைக் கொண்ட சக்கரம் உண்டு. இச்சக்கரம் கொடியின் வெள்ளைப் பாகத்தின் உயரத்தில் நான்கில் மூன்று பாக உயரத்தைக் கொண்டது. கொடியின் முழு உயரம், முழு நீளத்தில் மூன்றில் இரண்டு பாகமாகும். இக்கொடி இந்தியப் போர்க் கொடியாகவும் விளங்கும்.
இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் சுரையா தியாப்ஜி ஆவார். ஆனால் பொதுவாக பிங்கலி வெங்கைய்யா வடிவமைத்ததாகச் சொல்லப்படும் கொடியில் இராட்டை சின்னம் இடம் பெற்றிருக்கும் அரசியல் முறைப்படி, தேசியக்கொடியைக் கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும். தேசியக் கொடியின் வெளிப்படுத்துதல், கையாள்தல் முறைகள், இந்திய கொடிச் சட்டத்தால் ஆளப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu