மக்களவை தேர்தல்: திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை

குமாரபாளையத்தில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளர், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை தலைவருமான மகேந்திரன் பேசினார்
நாமக்கல், குமாரபாளையம் நகர தி.மு.க. அலுவலகத்தில் நகர செயலர் செல்வம் தலைமையில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலர் மதுரா செந்தில் பங்கேற்றார். நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு பூத் முகவராக செயல்படுவது என குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளர், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை தலைவருமான மகேந்திரன் ஆலோசனை வழங்கினார். இதில் நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்
தி.மு.க. மாவட்ட செயலர் மதுரா செந்தில் அறிவுறுத்தலின்படி, அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம், கலைவாணி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து உணவு வழங்கப்பட்டது. தமிழக அரசின் சார்பில் குழந்தைகள் நலனுக்காக, மாணவ, மாணவியர் நலனுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாக அங்கன்வாடி குழந்தைகளுக்காக ஊட்டச்சத்து வழங்கப்பட்டு வருகிறது.
ஊட்டச்சத்து குறித்து டாக்டர்கள் கூறியதாவது: ஊட்டச்சத்து (Nutrition) என்பது வாழ்க்கைக்கு ஆதாரமான அத்தியாவசிய மூலப்பொருள்களை உயிரணுக்களுக்கும், அதன்மூலம் உயிரினங்களுக்கும் வழங்குகின்ற ஓர் உணவு ஆகும். ஊட்டச்சத்து வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம் ,கொழுப்பு என பல ஊட்டக்கூறுகள் இதில் இடம்பெற்றிருக்கும். பல பொதுவான சுகாதார பிரச்னைகளை ஆரோக்கியமான உணவைக் கொண்டு தடுக்கவோ தவிர்த்து முடியும்.
ஊட்டச்சத்து, ஊட்டக்கூறு என்ற இரண்டுமே ஊட்டச்சத்து என அழைக்கப்படுவதுண்டு. ஊட்டச்சத்து என்பது உயிர்வேதியி யல் மற்றும் உடலியல் செயல்முறையாகும். இச்செயல்முறையின் மூலம் ஓர் உயிரினம் தனது வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள உணவைப் பயன்படுத்துகிறது. ஊட்டச்சத்து என்பது உயிர்வேதியியல் மற்றும் உடலியல் செயல்முறையாகும், இதன் மூலம் ஒரு உயிரினம் தனது வாழ்க்கையை ஆதரிக்க உணவைப் பயன்படுத்துகிறது. இச்செயல் முறை உயிரினங் களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காததால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. ஊட்டச்சத்து அறிவியல் என்பது ஊட்டச்சத்து பற்றிய ஆய்வு ஆகும். இருப்பினும் இது பொதுவாக மனித ஊட்டச்சத்தையே வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu