திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

திமுகவில் புதிய உறுப்பினர்  சேர்க்கை தீவிரம்
X

குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் தீவிர உறுப்பினர்சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவையொட்டி, தீவிர உறுப்பினர் சேர்க்கை செயல்படுத்த வேண்டி, தி.மு.க. தலைமை கழகம் அறிவுறுத்தியதையடுத்து, குமாரபாளையம் நகரில் 33 வார்டுகளில் தி.மு.க. சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் உறுப்பினர் சேர்க்கை படிவங்களில் ஆர்வத்துடன் தங்கள் பெயர்களை பதிவு செய்து வருகின்றனர். இதனை நகர தி.மு.க. செயலர் அனைத்து வார்டுகளில் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். நகர துணை செயலர் ரவி, நகர பொருளர் செல்வகுமார் உடனிருந்தனர்.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் 120 ஆட்டோ ஓட்டுனர்கள் தி.மு.க.வில் இணையும் விழா நகர செயலர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க. செயலர் மதுரா செந்தில் பங்கேற்று, தளபதி டீசல் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க போர்டை திறந்து வைத்து, அனைவருக்கும் சால்வை அணிவித்து கட்சியில் இணைத்து கொண்டார். ஜி.ஹெச்.எதிரில் தளபதி தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க போர்டையும், ஜி.ஹெச் வளாகத்தில் சேர்மன் விஜய்கண்ணன் சொந்த செலவில் கட்டப்பட்ட நிலமட்ட குடிநீர் சேமிப்பு தொட்டியையும் மதுரா செந்தில் திறந்து வைத்தார். சேர்மன் விஜய்கண்ணன், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், கவுன்சிலர்கள் ஜேம்ஸ், தர்மராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் நகர தி.மு.க. அலுவலகத்தில் நகர செயலர் செல்வம் தலைமையில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலர் மதுரா செந்தில் பங்கேற்றார். நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு பூத் முகவராக செயல்படுவது என, குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளர், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை தலைவருமான மகேந்திரன் ஆலோசனை வழங்கினார். இதில் நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர்

குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு புதிய கூடுதல் கட்டிடங்களை நாமக்கல்லில் சில நாட்கள் முன்பு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தில் உள் கட்டமைப்புக்கு என்னென்ன தேவை என்பது குறித்து, நாமக்கல் மாவட்ட தி.மு.க.செயலர் மதுரா செந்தில் உத்திரவின் பேரில், நகர தி.மு.க. செயலர் செல்வம், ஜி.ஹெச்.ல் ஆய்வு செய்து, தலைமை டாக்டர் பாரதியிடம் ஆலோசனை செய்தார். டாக்டர் பாரதி சில ஆலோசனைகள், தேவைகள் குறிப்பிட்டு சொல்ல, அதனை மாவட்ட செயலர் ஆதரவுடன் நிறைவேற்றி தருவதாக செல்வம் கூறினார். ஆய்வின் போது, தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.




Tags

Next Story
ai in future agriculture