திமுக பொதுக்கூட்டம் அமைச்சர் வேலு பங்கேற்பு

திமுக பொதுக்கூட்டம் அமைச்சர் வேலு பங்கேற்பு
X

குமாரபாளையம் அருகே தி.மு.க. சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்

குமாரபாளையம் அருகே தி.மு.க. சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் வேலு பேசினார்

குமாரபாளையம் அருகே தி.மு.க. சார்பில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு லிழா பொதுக் கூட்டம் நடைபெற்றது

குமாரபாளையம் அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலர் மதுரா செந்தில் தலைமையில் நடந்தது. சிறப்பு பேச்சாளராக தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு பங்கேற்றார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது: முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மக்கள் தி.மு.க. ஆட்சி மீது திருப்தி அடைந்துள்ளனர். மாணவ, மாணவியர் நலன் காக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தி.முக.வின் வெற்றிக்கு முக்கிய காரணம் நாமக்கல் மண் என்றால் அது மிகையில்லை. பேராசிரியர் வெற்றி பெற்ற மண்.

1965ல் மொழிப்போர் போராட்டங்கள் தி.மு.க. வெற்றிக்கு துணையாக இருந்தது. கருணாநிதி பன்முகம் கொண்டவர். 95 ஆண்டு கால வாழ்வு. 80 ஆண்டு கால பொது வாழ்வு. 13 முறை தேர்தலில் நின்றார். 13 முறையும் வெற்றி பெற்றார். 5 முறை முதல்வராக இருந்தார். 75 படங்களுக்கு கதை வசனம் எழுதி உள்ளார். 29 படங்களை தயாரித்தார். 15 நாடகங்கள் எழுதி நடித்தார். பத்திரிகையாளர். அரசு பஸ்களை விட்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கியவர் கருணாநிதி.நுகர்வோர் வாணிப கழகம் உருவாக்கினார். திராவிட மாடல் ஆட்சி என்று ஸ்டாலின் சொன்னார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்றார் ஸ்டாலின். மகளிருக்கு கட்டணம் இல்லாத பஸ். திராவிட இயக்கம் தான் பெண்களை படிக்க சொன்னது. உள்ளாட்சியில் பெண்கள் சாதனைக்கு காரணம்பெரியார், அண்ணா வழியில் ஆட்சிய நடத்தியவர் கருணாநிதி. பெண்களுக்கு தனி கல்லூரி தொடங்கப்பட்டது. மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கிய ஆட்சி ஸ்டாலின் ஆட்சி.

மின் கட்டணம் அதிகமாக காரணம் உதய் திட்டம். மின் கட்டணம் அதிகம் ஆக தி.மு.க. ஆட்சி காரணம் இல்லை. அதனை அமல்படுத்த காரணமானவர் தங்கமணி. கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் உதய் மின் திட்டத்தில் கையெழுத்து போட முடியாது என்றனர். இலவச மின்சாரம் கிடைக்க செய்தவர் ஸ்டாலின். இந்தத்தொகுதியில்தங்கமணியை வெற்றி பெற வைத்தது வருத்தம்தான். சிவாஜி ஹீரோ ஆக காரணம் கருணாநிதி. அனைத்து ஜாதியினர் அரச்சகர் ஆகலாம் என்ற திட்டம் கொண்டு வந்தது கருணாநிதி.இவ்வாறு அவர் பேசினார்.



Tags

Next Story
future ai robot technology