ஒருதலை பட்சமாக செயல்படுவதாக நகராட்சி கமிஷனர் மீது திமுகவினர் புகார்

ஒருதலை பட்சமாக செயல்படுவதாக நகராட்சி கமிஷனர் மீது திமுகவினர் புகார்
X

குமாரபாளையம் நகராட்சி.

நகராட்சி மண்டல நிர்வாக ஆலோசனை கூட்டத்தில் துணை சேர்மனை பங்கேற்க விடாமல் கமிஷனர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக திமுகவினர் புகார் தெரிவித்தனர்.

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் நிர்வாகத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் சேலத்தில் நடைபெற்றது.

குமாரபாளையம் நகராட்சி சார்பில் கமிஷனர் விஜயகுமார், பொறியாளர் ராஜேந்திரன் பங்கேற்றனர். நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் வெளியூர் சென்றதால் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. துணை சேர்மனுக்கு இது குறித்து தகவல் தரப்படவில்லை என்றும், அவர் வருவது கமிஷனருக்கு பிடிக்கா விட்டால் தி.மு.க. கவுன்சிலர்கள் யாராவது ஒருவரை அழைத்து சென்று இருக்கலாம். கமிஷனர் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார் என தி.மு.க.வினர் புகார் தெரிவித்தனர்.

இது குறித்து கமிஷனரிடம் கேட்டபோது, தி.மு.க. நகர செயலர் செல்வத்திடம் இது பற்றி கூறினேன் என்றார்.

தி.மு.க. நகர செயலர் செல்வம் கூறுகையில், இப்படி ஒரு மீட்டிங் நடக்கவுள்ளது, என்று மட்டும்தான் சொன்னாரே தவிர துணை சேர்மன் அல்லது இதர கவுன்சிலர்களிடம் சொல்லி கலந்துகொள்ள சொல்லுங்கள் என சொல்லவில்லை என்றார். கமிஷனர் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார் என நகர செயலர் உள்ளிட்ட தி.மு.க.வினர் புகார் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!