திமுக சொத்து பாதுகாப்பு நிர்வாகிக்கு பாராட்டு
தி.மு.க. தலைமை சொத்து பாதுகாப்பு குழு நிர்வாகிக்கு குமாரபாளையம் நகர நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தி.மு.க. தலைமை சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினராக மீண்டும் அறிவிக்கப்பட்ட ஜே.கே.கே. குடும்பத்தை சேர்ந்த மாணிக்கத்திற்கு நகர தி.மு.க. செயலர் செல்வம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் துணை செயலர்கள் ரவி, பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கதிரவன்சேகர், விடியல் பிரகாஷ், நிர்வாகிகள் ராஜ்குமார், பிரேம்குமார், கணேசன் உள்பட பலர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
திமுக கட்சியில் அண்மையில் பொதுக்குழு கூட்டமும், 15-வது உட்கட்சி தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நகரம், பேரூர், ஒன்றிய மாநகர், கிளைக் கழகம் உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாகிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. இதேபோன்று திமுக கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்டங்களில் மாவட்ட செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் அவை தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் போன்றவர்களுக்கான தேர்தலும் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டது.
தற்போது திமுக கட்சியில் தேர்வு செய்யப்பட்ட பல்வேறு அணிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் போன்றவர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் திமுக கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு செயலாளராக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப் பட்டுள்ளார். அதன் பிறகு சொத்து பாதுகாப்பு குழு தலைவராக அறந்தாங்கி இராமனும், துணைத் தலைவர்களாக பொங்கலூர் நா. பழனிச்சாமி மற்றும் இ.ஏ.பி. சிவாஜி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
இதனையடுத்து செய்தி தொடர்பு தலைவராக டிகேஎஸ் இளங்கோவனும், செயலாளராக பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும், இணைச் செயலாளர்களாக தமிழன் பிரசன்னா, சிவ. ஜெயராஜ் மற்றும் கவிஞர் சல்மான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் திமுக கட்சியின் தலைமை தேர்தல் பணிக்குழு தலைவர்களாக அமைச்சர் ராஜகண்ணப்பன், ப. ரங்கநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இதேப்போன்று பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள், செயலாளர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் போன்றவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்று ஒன்றரை வருடங்களாகும் நிலையில் அமைச்சரவையில் புதிய மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது தமிழக முதல்வரின் ஸ்டாலின் ஆட்சியின் கீழ் 33 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இதில் கட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் அமைச்சர்கள் மற்றும் நிர்வாக திறமையின்றி செயல்படும் அமைச்சர்கள் சிலரை தூக்குவதற்கு கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
அந்த வகையில் தற்போது அமைச்சர் சக்கரபாணியும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது தொடர்பாக முதல்வர் முடிவெடுப்பார் என்று கூறியுள்ளார். ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சராக வேண்டும் என்பதுதான் ஆசை என்று கூறி வருகிறார். இந்நிலையில் உதயநிதியுடன் சேர்த்து திமுக கட்சியை சேர்ந்த பெண் எம்எல்ஏக்கள் 3 பேர் மற்றும் இளைஞர் அணியை சேர்ந்தவர்களுக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu