ஆதரவற்றோர்களுக்கு வேட்டி, சேலை வழங்கிய தே.மு.தி.க.வினர்!

ஆதரவற்றோர்களுக்கு வேட்டி, சேலை வழங்கிய தே.மு.தி.க.வினர்!
X

படவிளக்கம் :

குமாரபாளையம் பாசம் ஆதரவற்றோர் மையத்தில் தே.மு.தி.க.வினர் வேட்டி, சேலை வழங்கினர்.

குமாரபாளையம் தே.மு.தி.க.வினர் ஆதரவற்றோர்களுக்கு வேட்டி, சேலை வழங்கினர். கு

ஆதரவற்றோர்களுக்கு வேட்டி, சேலை வழங்கிய தே.மு.தி.க.வினர்

குமாரபாளையம் தே.மு.தி.க.வினர் ஆதரவற்றோர்களுக்கு வேட்டி, சேலை வழங்கினர்.

குமாரபாளையம் பாசம் ஆதரவற்றோர் மையத்தில் உள்ள முதியவர்களுக்கு தே.மு.தி.க. சார்பில், தீபாவளி திருவிழாவையொட்டி, வேட்டி, சேலை வழங்கும் விழா மாவட்ட பொருளர் மகாலிங்கம், நகர செயலர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலர் விஜய்சரவணன் பங்கேற்று, ஆதரவற்றோர்களுக்கு வேட்டி, சேலை, இனிப்புகள் வழங்கி வாழ்த்தினார். ஒன்றிய செயலர் மணியண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் தே.மு.தி.க. பூத் கமிட்டி அமைத்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது.

குமாரபாளையம் தொகுதி தே.மு.தி.க. சார்பில் பூத் கமிட்டி அமைக்க மாவட்ட செயலர் விஜய் சரவணன் உத்திரவிட்டதன்படி, பூத் கமிட்டி அமைக்கும் ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் தலைமையில் நடந்தது. தொகுதியில் உள்ள அனைத்து பூத்களுக்கும் கமிட்டி அமைக்க வேண்டும், வரவிருக்கும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாமில், அந்தந்த பகுதி மக்களுக்கு, வார்டு நிர்வாகிகள் உதவிட வேண்டும், குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும், பழுதான சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும், வடிகால்கள் இல்லாத இடத்தில் வடிகால் அமைக்க வேண்டும், சேதமான வடிகால்களை சீரைமைக்க வேண்டும், சாலை மற்றும் வடிகால் அமைக்க மரங்களை வெட்டுவதை தவிர்க்க, ஒப்பந்ததாரர்களுக்கு நகராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும், தீபாவளி நெருங்குவதால் பிரதான சாலைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்து, சமூக விரோதிகள் நடமாட்டம் கண்காணிக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் குமாரபாளையம், பள்ளிபாளையம், ஒன்றிய நிர்வாகிகள் நாராயணசாமி, நாகராஜன், மணியண்ணன், வெள்ளிங்கிரி, வேலுமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் கண்ணகி நகர் பகுதியில் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிக்காக அப்பகுதியில் 6 மரங்கள்

அரசு அனுமதி இல்லாமல் இரவோடு இரவாக வெட்டப்பட்டு, வெட்டப்பட்ட மரங்கள் கொண்டு செல்லப்பட்டன. இதனால் தே.மு.தி.க. சார்பில் குமாரபாளை யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, நகராட்சி ஆணையர் சரவணன் ஆகியோர் வசம், தே.மு.தி.க. மாவட்ட பொருளர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் மனுக்கள் கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கபடும் என இருவரும் கூறினார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!