வட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள்: குமாரபாளையம் அரசுப்பள்ளி மாணவிகள் சாம்பியன்
வட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாம்பியன் பட்டம் பெற்றனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் தனியார் கல்லூரியில் மூன்று நாட்கள் நடந்தது. 35க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
பெண்கள் பிரிவுகளில் குமாரபாளையம், அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் 192 புள்ளிகள் எடுத்து சாம்பியன் பட்டம் பெற்றனர். 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் சோபிகா மற்றும் தனலட்சுமி 15 புள்ளிகள் எடுத்து தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர். 17 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் மௌனிகா 15 புள்ளிகள் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றார். 19 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் கனிஷ்கா மற்றும் மேகா 15 புள்ளியில் பெற்று தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர். இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியை காந்த ரூபி, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர், ஆசிரியப் பெருமக்கள், மாணவியர்கள், உடற்கல்வி ஆசிரியர் அப்பாதுரை உள்ளிட்ட பலரும் வாழ்த்தினர். இவற்றில் வெற்றி பெற்ற மாணவிகள் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu