நாமக்கல் மாவட்ட தி.மு.க. செயலர் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்

நாமக்கல் மாவட்ட தி.மு.க. செயலர் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்
X

மாவட்ட தி.மு.க. செயலர் மூர்த்தி பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்ட தி.மு.க. செயலர் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்ட தி.மு.க. செயலர் மூர்த்தி பிறந்தநாளையொட்டி குமாரபாளையம் தி.மு.க. சார்பில் நகர செயலர் செல்வம் தலைமையில் நேரில் சென்று பொன்னாடை, மலர்மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் அகர்வால் கண் மருத்துவமனையில் 25 நபர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்வதற்கான முழு செலவும், ஒரு மகளிருக்கு கண் அறுவை சிகிச்சைக்கு பின் கண் கண்ணாடியும், இரண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையும் மற்றும் பல நலத்திட்ட உதவிகள் மாவட்ட செயலர் கையால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் நகராட்சி துணை சேர்மன் வெங்கடேசன், கவுன்சிலர்கள் சத்தியசீலன், ரங்கநாதன், நகர துணை செயலர் ரவி, நகர பொருளர் செல்வம், வட்ட செயலர்கள் ராஜ்குமார், பாலசுப்ரமணியன், புவனேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!