குமாரபாளையம் அருகே கிராம சபா கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பங்கேற்பு
குப்பாண்டபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபா கூட்டம்.
தேசிய ஊராட்சிகள் தினத்தையொட்டி குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சியில் கிராமசபா கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் கவிதாவேலுமணி தலைமை வகித்தார்.
இதில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்து கொண்டு கூட்ட நடவடிக்கைகளை பார்வையிட்டார். நீடித்த, நிலைத்த வளர்ச்சியடைதலில் பொதுமக்களின் பங்கை வலியுறுத்தும் உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். தமிழக முதல்வர் அனுப்பிய வாழ்த்து செய்தியை ஊராட்சி தலைவர் வாசித்து காட்டினார்.
கலெக்டர் பேசுகையில், கிராமசபை கூட்டம் என்பது கிராமங்களின் வளர்ச்சியில் பொதுமக்களின் பங்களிப்பையும், வெளிப்படையான நிர்வாகத்தையும் மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. இந்த கூட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுக்கான திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். தகுதியுடைய அனைவரும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் விண்ணபித்து பயன்பெற வேண்டும் என அவர் பேசினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான ஆதார் அட்டைகள், மாற்றுத்திறனாளிகள் அட்டை பெற வி.ஏ.ஒ. உதவி பெற்று பணிகள் செய்து தர உத்திரவிட்டார். வேளாண்மைத்துறை மூலம் ஒரு வார காலத்திற்கு முகாம் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கான கடன் அட்டை வழங்கப்படவுள்ளது. பசுமைக்குடில் அமைத்து சீதா, கொய்யா, கொடுக்காப்புளி, புளியன், சப்போட்டா உள்ளிட்ட மரக்கன்றுகள் வளர்க்கப்படுவதை கலெக்டர் பார்வையிட்டார்.
இதில் ஒன்றிய மாவட்ட திட்ட இயக்குனர் வடிவேல், ஒன்றிய கவுன்சிலர் தனசேகரன், துணை தலைவர் புனிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட செயலர் காமராஜ், நிர்வாகிகள் சித்ரா, உஷா, மல்லிகா உள்ளிட்ட பலர் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்ற கோரிக்கை விடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu