குமாரபாளையம் அருகே பெத்தாம்பாளையம் கிராம சபா கூட்டத்தில் மரக்கன்றுகள் வழங்கல்

குமாரபாளையம் அருகே பெத்தாம்பாளையம் கிராம சபா கூட்டத்தில் மரக்கன்றுகள் வழங்கல்

பெத்தாம்பாளையம் கிராமத்தில் நடந்த கிராமசபா கூட்டத்தில் ஊராட்சி தலைவி புஷ்பா, வல்வில் ஓரி அமைப்பினர் சார்பில் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

குமாரபாளையம் அருகே பெத்தாம்பாளையத்தில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சியின் பெத்தாம்பாளையம் கிராமத்தில் கிராமசபா கூட்டம் ஊராட்சி தலைவி புஷ்பா தலைமையில் நடைபெற்றது. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தர்மராஜா பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் விளை நிலங்களை பாதிக்கும் சாயபட்டறைக்கு தடை விதிக்கவும், புதிய டாஸ்மாக் கடை வைக்கவும், புகார் கூறினால் அலட்சியம் காட்டும் மின் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் வரவு, செலவு கணக்கு சமர்பிக்கப்பட்டது.

தட்டான்குட்டை, சத்யா நகர், ஜெய்ஹிந்த் நகர், வீரப்பம்பாளையம், நல்லாம்பாளையம், சின்னாயக்காடு, வீ.மேட்டூர், ஓலப்பாளையம், பெரியார் நகர் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் தேவைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கினர்.

கூட்டத்தின் முடிவில் வல்வில் ஓரி அமைப்பினர் சார்பில் பொதுமக்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Tags

Read MoreRead Less
Next Story