கொரோனா தடுப்பு பணியில் சேவையாற்றும் மஹாயோகம் அமைப்பினர்..!
கொரோனா தடுப்பு பணியாக முன் களப் பணியாளர்களுக்கு கபவாதசூப் கொடுக்கும் மஹாயோகம் அமைப்பினர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அலை இரண்டு பரவியுள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தரும் கபசுரக் குடிநீரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமூக நல ஆர்வலர்கள் மற்றும் தமிழக அரசு மருத்துவமனைகளில், சித்த வைத்திய மையம் மூலமாக பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒருபடியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மஹா யோகம் அறக்கட்டளை சார்பாக பள்ளிபாளையம் நகராட்சி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக தினந்தோறும் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள், முன்கள பணியாளர்கள், காவலர்கள் என தினந்தோறும் 1500 நபர்களுக்கு கபவாத சூப் மற்றும் கபவாத மாத்திரைகளை வழங்கி வருகின்றனர். இதை போல தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் மஹா யோகம் அமைப்பினர் சேவையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது.
இது குறித்து மஹா யோகா டாக்டர் விஜய் ஆனந்தன் தெரிவித்ததாவது, " கொரோனா பரவல் தற்போது குறைந்திருந்தாலும் கபவாத சூப், கபவாத மாத்திரைகள் மூலம் இந்த நோயை எளிதில் விரட்டி விடலாம் என்பதால் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு தன்னார்வ நோக்கத்துடன் கொடுத்து வருகிறோம்" என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu