தேர்தல் பணிகள் குறித்து டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு
படவிளக்கம் : குமாரபாளையத்தில் தேர்தல் பணிகள் குறித்து டி.ஐ.ஜி. உமா நேரில் ஆய்வு செய்தார்.
தேர்தல் பணிகள் குறித்து டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு
குமாரபாளையத்தில் தேர்தல் பணிகள் குறித்து டி.ஐ.ஜி. நேரில் ஆய்வு செய்தார்.
ஏப்.19 லோக்சபா தேர்தல் நடப்பதையொட்டி அரசியல் கட்சியினர் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. வங்கி மேலாளர்கள், நிதி நிறுவன நிர்வாகிகள், நகைக்கடை அதிபர்கள், டாஸ்மாக் கண்காணிப்பாளர்கள், டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் என பலதரப்பட்ட நபர்களுடன், போலீசார் பலகட்டங்களாக ஆலோசனை கூட்டம் நடத்தி, எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தினர். ஓட்டுச்சாவடி ஏற்பாடு பணிகள் நடந்து வரும் நிலையில், போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைககள் குறித்து, சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. உமா, நேரில் பங்கேற்று, டி.எஸ்.பி. இமயவரம்பன், இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசாரிடம் கேட்டறிந்து, ஆலோசனை கூறினார்.
பெட்ரோல் பங்க்குகளில் பாட்டிலில் பெட்ரோல் தர கூடாது என போலீசார் அறிவுறுத்தல்
குமாரபாளையத்தில் நடந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூட்டத்தில், பாட்டிலில் பெட்ரோல் தர கூடாது என போலீசார் அறிவுறுத்தினர்.
தேர்தல் பிரச்சார சமயங்களில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்ககுமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. பொதுமக்கள் பெட்ரோல் பங்க்கிற்கு கேன் மற்றும் பாட்டில் கொண்டு வந்து பெட்ரோல் கேட்டால் கொடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. போலீசாரின் இந்த தகவலை ஏற்று, இனி யாருக்கும் பாட்டிலில் பெட்ரோல் கொடுக்க மாட்டோம் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் உறுதி கூறினர். எஸ்.ஐ.க்கள் தங்கவடிவேல், கெங்காதரன், எஸ்.எஸ்.ஐ.க்கள் குணசேகரன், முருகேசன், மாதேஸ்வரன், ஏட்டுக்கள் ராம்குமார், பார்த்திபன் உள்பட போலீசார் பலரும் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu