குடியிருப்பு கட்டுமான பணிகளை பார்வையிட்ட டிஜிபி

குடியிருப்பு கட்டுமான பணிகளை    பார்வையிட்ட டிஜிபி
X

குமாரபாளையத்தில் காவலர் குடியிருப்பு கட்டுமான பணி நிறைவை டி.ஜி.பி. வெங்கடேசன் நேரில் பார்வையிட்டார்

குமாரபாளையத்தில் காவலர் குடியிருப்பு கட்டுமான பணிகளை டிஜிபி நேரில் பார்வையிட்டார்

குமாரபாளையத்தில் காவலர் குடியிருப்பு கட்டுமான பணிகளை டி.ஜி.பி. நேரில் பார்வையிட்டார்.

குமாரபாளையம் போலீசாருக்கு காவலர் குடியிருப்பு கட்ட, பல இடங்களில் பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடத்தப்பட்டது. இறுதியாக எஸ்.எஸ்.எம். பொறியியியல் கல்லூரி பின்புறம் அதற்கான இடம் கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டு, கட்டுமான பணி துவங்கி தற்போது முடிவடைந்துள்ளது. இதனை தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் டி.ஜி.பி. வெங்கடேசன் நேரில் பார்வையிட்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது: 408.97 லட்சங்கள் மதிப்பில் குமாரபாளை யத்தில் காவலர் குடியிருப்பு கட்டுமான பணி நிறைவு பெற்றதையடுத்து, 32 வீடுகளில், தரை தளம், மின் இணைப்பு பணிகள், குழாய்கள் அமைத்த பணிகள், குடிநீர் டேங்க்குகள் பொருத்திய பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் டி.ஜி.பி. வெங்கடேசன் நேரில் பார்வையிட்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார். குடியிருப்பு பகுதி முழுதும் சுற்றி, சுற்றிசுவர் அமைக்க கட்டுமான ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணா, திருச்செங்கோடு டி.எஸ்.பி. இமயவரம்பன் உள்பட பலர் உடனிருந்தனர்.


.

Tags

Next Story
ai in future agriculture