குமாரபாளையம் வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்
படவிளக்கம் :
குமாரபாளையம் வழியாக பழனி பாதயாத்திரை சென்று வருகிறார்கள்.
பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் குமாரபாளையம் வழியாக பழனி பாதயாத்திரை சென்று வருகிறார்கள்.
பொங்கல் விழாவையொட்டி மாநிலம் முழுதும் பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். அந்தந்த பகுதி மக்கள் அங்குள்ள முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். சுவாமி மலை, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, உள்ளிட்ட கோவில்களுக்கு அதிகம் பாதயாத்திரை செல்வார்கள். சேலம், சங்ககிரி, குமாரபாளையம், உள்ளிட்ட பகுதி மக்கள் பழனி பாதயாத்திரை செல்வார்கள். குமாரபாளையம் வழியாக சாரை, சாரையாக பாதயாத்திரை சென்று வருகிறார்கள். காவடி எடுத்தவாறும், வேல் எடுத்தவாறும் பக்தர்கள் பாத யாத்திரை சென்று வருகிறார்கள். இவர்களுக்கு குமாரபாளையம் பகுதியில் முருக பக்தர்கள் சார்பில் தண்ணீர், உணவு, பிஸ்கட், ஆகியவைகள் வழங்கி வருகிறார்கள்.
பழனி ஒரு புண்ணிய பூமி. சித்தர்கள் வாழ்ந்திருந்த இடம். அதன் மீதுதான் அழகும் இளமையும் கொண்ட 'தண்டாயுதபாணி' என்ற முருகனை மலை உச்சி மீது இருந்த பதினெட்டு சித்தர்களில் ஒருவரான 'போகர்' என்ற சித்தர் பிரதிஷ்டை செய்து உள்ளார். 'போகர்' அற்புதமான சித்தர். 'இலாயிரம்' மற்றும் 'போகர் பன்னிராயிரம்' என்ற இலக்கியத்தை படைத்தவர். இன்றைக்கும் கூட யாருமே அறிந்திராத வகையில் உள்ள ஒன்பது நவபாஷம் கொண்டு அந்த சிலையை செய்து உள்ளார். உலகம் முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கில் மக்கள் வந்து அங்கு வணங்கும் வகையில் அந்த சிலை தெய்வீகத் தன்மையைப் பெற்று உள்ளது. அந்த சிலையை வந்து வணங்குவது புராணப் பழக்கங்களில் ஒன்று. 'திருமுறுகாற்றுப் படை'யில் 'மகாலஷ்மி', 'காமதேனு', 'இந்திரன்' போன்றவர்கள் 'அவினான்குடி' என்ற பழனிக்குச் சென்று வழிபட்டதாகக் கூறப்பட்டு உள்ளது. அந்த தெய்வ பழக்க முறையை தொடர்ந்தே மக்கள் இந்த மலை மீதான ஆலயத்திற்கு சென்று இந்தப் பிறவியில் வளம் பெற்று வாழவும் அடுத்த பிறவியின் இரகசியங்களை அறிந்து கொள்ளவும் செல்கின்றனர். 'அருணகிரிநாதர்' என்ற துறவி 'இகப்பரசுபாக்கியம் அருள்வாயா' எனப் பாடுகிறார்.
முருகனைப் பல வழிகளிலும் வழிபடலாம் என்றாலும் பக்தி மார்க வழிபாடே சிறந்த மார்கம். பாத யாத்திரை என்ற நடைப் பயணம் அதில் ஒரு மார்கம். கடவுளின் அருளைப் பெறுவதற்காகவே உண்மையில் பாத யாத்திரை செய்கின்றனர். ஒவ்வொருவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் உள்ளன. அவரை வணங்குவதின் மூலம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களை அவர் களைந்து விடுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கலியுக வரதன் என்ற அவரை வணங்குகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu