குமாரபாளையத்தில் தேவாங்கர் மன்றம் சார்பில் வேட்டி, சேலைகள் வழங்கல்

குமாரபாளையத்தில் தேவாங்கர் மன்றம் சார்பில் வேட்டி, சேலைகள் வழங்கல்
X

குமாரபாளையம் அனைந்திந்திய தேவாங்கர் சவுடேஸ்வரி நற்பணி மன்றம் சார்பாக, தேவாங்கர் நெசவு தொழில் சார்ந்த ஆண்கள், பெண்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில், தேவாங்கர் மன்றம் சார்பில், வேட்டி சேலை வழங்கும் விழா நடைபெற்றது.

அனைந்திந்திய தேவாங்கர் சவுடேஸ்வரி நற்பணி மன்றம், குமாரபாளையம் வட்டாரம் 2ன் சார்பாக, தேவாங்கர் நெசவு தொழில் சார்ந்த ஆண்கள், பெண்களுக்கு வேட்டி, சேலை வழங்கும் விழா, வேதாந்தபுரம் சித்தி விநாயகர் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு, தலைமை மன்ற ஆலோசகர் மாணிக்கம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல், கல்லாங்காடு தேவாங்கர் மன்றத் தலைவரும், தமிழ்நாடு சிறு விசைத்தறி ஏற்றுமதி ஜவுளி உற்பத்தியாளர் சம்மேளனம் தலைவருமான அப்பு செட்டியார் பங்கேற்று, நெசவுத் தொழில் சார்ந்த ஆண்கள், பெண்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கி, வாழ்த்தி பேசினார்.


குமாரபாளையம் புதுப்பேட்டை மற்றும் தம்மண்ணன் வீதியில் உள்ள சவுண்டம்மன் கோவில்களை, அறநிலையத்துறையிடம் இருந்து மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள், இதில் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் குணசேகரன், நடராஜ பெருமாள், தியாகமணி,சீனிவாசன், பிரபாகரன், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!