வேதாந்த மட கும்பாபிஷேக விழா தேவாங்கர் குல குரு பங்கேற்பு

குமாரபாளையம் வேதாந்த மட கும்பாபிஷேக விழா தேவாங்கர் குல குரு கர்நாடக மாநிலம் ஹம்பி ஹேம கூட காயத்திரி பீட தயானந்த புரி சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
குமாரபாளையம் வேதாந்த மட கும்பாபிஷேக விழாவில் தேவாங்கர் குல குரு பங்கேற்றார்.
குமாரபாளையம் வேதாந்தபுரம் வேதாந்த சிந்தன சாது சமாஜ ஆஸ்ரமத்தில் அமைந்துள்ள பொன் சிதம்பர ஞான தேசிக சுவாமிகளின் அதிஷ்டான மடாலய கும்பாபிஷேக விழா பிப்.1ல் முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. பிப். 9, 10ல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 08:30 மணியளவில் தேவாங்கர் குல குரு கர்நாடக மாநிலம் ஹம்பி ஹேம கூட காயத்திரி பீட தயானந்த புரி சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மாலையில் குமாரபாளையம் பாண்டுரங்கர் கோயிலில் பஜனை குழுவினரின் சிறப்பு பஜனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் வேதாந்த மட சித்ருபானந்த சுவாமிகள், குமாரபாளையம் ஆனந்தாஸ்ரம பூர்ணானந்த சரஸ்வதி சுவாமிகள், திருவண்ணாமலை சிதாபானந்த சுவாமிகள், முனிராஜா கல்வி நிறுவன நிர்வாகி ஜெயபிரகாஷ், ஆண்டாள் கம்பெனி ராஜூ, உள்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
வேதாந்த மடம் வரலாறு குறித்து மடத்தின் நிர்வாகிகள் கூறியதாவது: பொன் சிதம்பர ஞான தேசிக சுவாமிகள் குமாரபாளையம் நகரில் தங்கி, கைவல்யம் ஞான சாஸ்திரங்கள் பாடம் போதித்தும், வைத்தியம் மூலமாக தம்மை நாடி வரும் அன்பர்களுக்கு தீராத நோய்களை தீர்த்துக் கொண்டு இருந்தார்கள். குமாரபாளையம் வெங்கட்ராம செட்டியார் குமாரர் பெருமாள் செட்டியார் அவர்கள் தனக்கு சொந்தமான 1.76 ஏக்கர் நிலத்தை 07.07.1918ம் தேதியில், சுவாமிகள் அவர்களுக்கு ஆஸ்ரமம் அமைக்க தானமாக கொடுத்துள்ளார்.
அந்த இடத்தில்தான் வேதாந்த ஆஸ்ரமம் உள்ளது. தம்மை நாடிவரும் சாதுக்களை ஆதரிக்கவும், ஞான சாஸ்திரங்கள் பாடங்கள் போதிக்கவும், வைத்தியம் செய்யவும் கொடுத்தார். குமாரபாளையம் பொறியாளர் பெருமாள் செட்டியார் குமாரர் மாரைய்ய செட்டியார் தனக்கு சொந்தமான 5.82 ஏக்கர் நிலத்தையும் 22.08.1920ல் பொன் சிதம்பர ஞான தேசிக சுவாமிகள் பெயருக்கு தானமாக வழங்கினார்கள். இதில் சத்சங்க மண்டபமும், போஜன சாலையும், சிறப்பாக கட்டியுள்ளார். தனது சிஷ்யர்களை கொண்ட மடாலய பரிபாலன கமிட்டியை நியமித்து அதை சட்டப்படி பதிவு செய்து, வேதாந்த சிந்தன சாது சமாஜ ஆஸ்ரமம் என பெயரிட்டு கமிட்டியாரிடம் ஒப்படைத்தார்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu