மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டன ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் சம்பவத்திற்கு குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
மணிப்பூர் சம்பவத்திற்கு குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மணிப்பூரில் இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட கலவரத்தால் நாளுக்கு நாள் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. மணிப்பூர் வன்முறையை தடுத்து நிறுத்தக்கோரி, மத்திய அரசையும், மாநில அரசையும் வேண்டி, பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் சி.பி.ஐ.எம். நகர செயலர் சக்திவேல் தலைமையில் நடந்தது. இதில் மணிப்பூர் பிரச்சனையில் மவுனம் காக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிர்வாகிகள் ஆறுமுகம், குணசேகரன், பாலமுருகன், கார்த்திகேயன், மக்கள் நீதி மய்யம் காமராஜ், சித்ரா, மல்லிகா, காங்கிரஸ் தங்கராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில் விசைத்தறி கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல் படுத்தக்கோரி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் சார்பில் நகர தலைவர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விசைத்தறி தொழிலாளிக்கு எட்டு மணி நேர வேலை, மாதம் 26 ஆயிரம் சம்பளம், 60 வயதிற்கு மேல் 9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், 20 சதவீதம் கூலி உயர்வு போடப்பட்ட ஒப்பந்தத்தை விசைத்தறி உரிமையாளர்கள் உடனே அமல்படுத்த வேண்டும்.
பிராவிடண்ட் பண்ட், இலவச வீடு வழங்க வேண்டும், சுகாதாரம், குழந்தைகள் கல்வி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும், நலவாரிய குளறுபடிகளை சரி செய்து பணப்பயன்களை உயர்த்திக் கொடுக்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், சாயப்பட்டறை கழிவுநீர் காவிரி ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும், அரசு அறிவித்த பொது சுத்திகரிப்பு நிலையத்தை உடனே அமைக்க வேண்டும், மின் கட்டண உயர்வு, பஞ்சு விலை உயர்வு, கட்டுப்படுத்த வேண்டும், விசைத்தறியில் உற்பத்தியாகும் ஜவுளி ரகங்களுக்கு உரியவிலை கிடைத்திட உதவி செய்து, விசைத்தறி தொழில் அழியாமல் காக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட செயலர் அசோகன், நகர செயலர் பாலுசாமி, நகர பொருளாளர் வெங்கடேசன், நகர உதவி செயலர் மோகன், நகர துணை தலைவர் சக்திவேல், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu