குமாரபாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆர்ப்பாட்டம் வாபஸ்

குமாரபாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆர்ப்பாட்டம் வாபஸ்
X

சம்பவ இடத்தை நேரில் வந்து ஆய்வு செய்த இன்ஸ்பெக்டர் ரவி.

குமாரபாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்தை வாபஸ் பெற்றனர்.

குமாரபாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இது குறித்து நகர செயலர் அங்கப்பன் கூறுகையில், சின்னப்பநாயக்கன்பாளையம் தனியார் சிக்கன் கடையின் கழிவுநீர் குடியிருப்பு பகுதிக்குள் வந்ததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதுகுறித்து பலமுறை எடுத்துக்கூறியும் கேட்கவில்லை. நகராட்சி கமிஷனர் வசமும் கூறி பலனில்லை.

ஆகவே இதனை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டோம். இதனிடையே இன்ஸ்பெக்டர் ரவி சம்பவ இடத்தை நேரில் வந்து ஆய்வு செய்து, கழிவுநீர் செல்லாமல் இருக்கும்படி சிக்கன் கடையினரிடம் கூறி நடவடிக்கை எடுத்துள்ளார். இதனையடுத்து, நாங்கள் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்து கொள்கிறோம் என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!