குமாரபாளையத்தில் வட்டமலை ஆலய மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் வட்டமலை ஆலய மீட்பு குழுவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் மோகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பெருமளவில் பங்கேற்றனர்
குமாரபாளையத்தில் நடந்த வட்டமலை ஆலய மீட்பு குழுவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
குமாரபாளையம் அருகே வட்டமலை வேலாயுதசுவாமி கோவில் உள்ளது. இது 500 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. இது ஒருங்கிணைந்த நாமக்கல், சேலம் மாவட்டத்தை சேர்ந்த கத்தேரி கிராமம், தட்டான்குட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சொந்தமானது ஆகும். இதில் பல்வேறு சமூக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுவான குழுவினரால் நிர்வகிக்கப்பட்டு, பங்குனி உத்திர விழா உள்ளிட்ட விஷேச வைபவங்கள் நடத்தப்பட்டு வந்தது. எந்த ஒரு தனி சமூக்தாருக்கும் சொந்தமான கோவில் அல்ல. இந்து சமய அறநிலையத்துறை ஆளுகைக்கு வந்த பின் 1982 முதல், 1997ம் ஆண்டு வரை அனைத்து சமூக பிரதிநிதிகளை நியமனம் செய்தனர்.
தற்போது இந்து சமய அறநிலையத்துறை மூலம், கத்தேரி கிராமத்தில் உள்ள குறிப்பிட்ட சில சமூக மக்களின் பிரதிநிதிகளை நியமனம் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் இதர பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த நிர்வாக குழுவின் அனைத்து சமூக பிரதிநிகளை நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதன் பலனாக நேற்று கோவில் செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து வழக்கறிஞர் மோகன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த கோவில் அனைத்து சமூக பிரதிநிதிகளை கொண்டு நிர்வாகம் செயல்பட்டு வந்தது. அனைவரும் கோயில் முன்னேற்றத்திற்கு அரும்பாடு பட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குறிப்பிட்ட சில சமூக மக்களின் பிரதிநிதிகளை நியமனம் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதற்காக நீதி மன்றம் செல்லவும் தயாராக உள்ளோம். உண்மைக்கு புறம்பாக செயல்பட்டு வருகிறார்கள். இதற்கு முன்னாள் அமைச்சர் ஒருவர் துணையாக உள்ளார் என்று தெரிகிறது. அவரையும் சந்தித்து நியாயத்தை எடுத்து சொல்லி, முன்பு போல் நிர்வாகம் அனைத்து சமூக நபர்களுடன் செயல்பட நடவடிக்கை எடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் முன்னாள் தட்டன்குட்டை ஊராட்சி தலைவர்கள் காந்திநாச்சிமுத்து, செல்லமுத்து, தமிழ் தேசிய விடுதலை இயக்கம் தியாகு, தமிழ்நாடு மக்கள் உரிமை பேரவை ஒருங்கிணைப்பாளர் குறிஞ்சி, மக்கள் சிவில் உரிமை கழகம் பாலமுருகன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் பெருமாள், வக்கீல் கார்த்திகேயன், மக்கள் நீதி மைய நிர்வாகிகள் காமராஜ், சித்ரா, காங்கிரஸ் நகர துணை செயலர் சிவகுமார், அதிமுக வடக்கு ஒன்றிய செயலர் குமரேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu