உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

திருச்செங்கோடு வட்டம், சிக்கநாயக்கன்பாளையம் கிராமம், பலநாய்க்கன்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

திருச்செங்கோடு அருகே உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

திருச்செங்கோடு அருகே உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்செங்கோடு வட்டம், சிக்கநாயக்கன்பாளையம் கிராமம், பலநாய்க்கன்பாளையத்தில் உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டை உயர்த்தி வழங்க வலியுறுத்தி விவசாயி சந்திரசேகர் தலைமையில், தலைவர் கோபால் முன்னிலையில், ஆறுமுகம் தோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிறப்பு அழைப்பாளராக சங்ககிரி ராஜேந்திரன், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள் கலந்து கொண்டனர். கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள் எழுப்ப பட்டன. இது குறித்து பெருமாள் கூறியதாவது:கூடுதலாக இழப்பீடு வழங்கும் வரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும். அதுவரை இப்போது போடப்பட்ட தொகையை வாங்குவதில்லை என்று அவர் கூறினார். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெருமளவில் பங்கேற்றனர்.



Tags

Next Story
ai healthcare products