அரசு பெண்கள் பள்ளியில் சுற்றுச் சுவரை உயர்த்தி கட்ட கோரிக்கை

அரசு பெண்கள் பள்ளியில் சுற்றுச் சுவரை உயர்த்தி கட்ட கோரிக்கை
X

குமாரபாளையம் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியில்  சுற்றுச்சுவர் உயரம் குறைவாக இருக்கும் கழிப்பிடம். 

குமாரபாளையம் அரசு பெண்கள் பள்ளியில் சுற்றுச்சுவரை உயர்த்தி கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

குமாரபாளையம் அரசு பெண்கள் பள்ளியில் சுற்றுச் சுவரை உயர்த்தி கட்ட வேண்டுமென பொது மக்கள் மற்றும் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

குமாரபாளையம் அரசினர் மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி கழிவறை பகுதியில் சுற்றுச்சுவர் தாழ்வாக இருப்பதால் மாணவிகள் கழிப்பறைக்கு போகாமல் மாலை வீட்டுக்கு சென்றுதான் கழிவறைக்கு போகிறார்கள். இதனால் மாணவிகளுக்கு சிறுநீரக பிரச்னைகள் ஏற்படுகிறது. மாணவிகளின் சங்கடத்தை போக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பாக பொதுப்பணித்துறை அதிகாரி அவர்களுக்கு சுற்றுச்சுவர் உயர்த்தக் கோரி கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

இதற்கு அவர்கள் அனுப்பிய பதில் கடிதத்தில் இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட துறையினரிடமிருந்து நிதி ஒதுக்கீடு பெற்றுக் கொடுக்கும் பட்சத்தில் பணியை செயலாக்கத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மாணவிகளின் நலன் கருதி புகார் தெரிவித்தால், புகார் கொடுத்தவரிடமே பணம் வசூல் செய்து கொடுக்கச் சொல்வது சரியா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பள்ளி அருகில் உள்ள கோம்புப்பள்ளத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியுள்ளனர். இதனால் கோம்புப்பள்ளம் மற்றும் சாலைகளும் சுருங்கிப் போயுள்ளது. மாணவிகளின் நலன் கருதி விரைவில் இப்பள்ளியின் சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள். பெற்றர்கள கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags

Next Story
ai in future agriculture