கத்தேரி பிரிவில் விபத்து அபாயம்: மேம்பாலம் அமைப்பதே சிறந்த உபாயம்

கத்தேரி பிரிவில் விபத்து அபாயம்:  மேம்பாலம் அமைப்பதே சிறந்த உபாயம்
X

குமாரபாளையம் அருகே, கத்தேரி பிரிவில் விபத்துகளை தடுக்க, மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று, கோரிக்கை எழுந்துள்ளது.

குமாரபாளையம், கத்தேரி பிரிவில் விபத்து அபாயம் உள்ளதால், மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், சேலம் - கோவை புறவழிச்சாலையில், கோட்டைமேடு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில், சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டதால் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் தற்போது மேம்பாலம் அமைக்கப்பட்டு, வாகன போக்குவரத்து நடந்து வருகிறது.

இதேபோல் அதிக வாகனங்கள் சாலையை கடக்கும் மற்றொரு பகுதியாக கத்தேரி பிரிவு உள்ளது. தட்டான்குட்டை ஊராட்சி, சத்யா நகர், வேமன்காட்டு வலசு, எம்.ஜி.ஆர். நகர் , குமாரபாளையம் நகரம், பவானி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும், இந்த கத்தேரி பிரிவில்தான் சாலையை கடந்து செல்கிறது.

அரசு தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் என கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியர்களும், இந்த சாலையை கடந்துதான் சென்றாக வேண்டும். எப்போதும் பரபரப்பாக இருக்கும் கத்தேரி பிரிவு பகுதியில், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு அடிக்கடி விபத்துக்கள் நடந்து பல குடும்பங்கள் தவித்து வரும் நிலை தொடர்கிறது. எனவே, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, கத்தேரி பிரிவிலும் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று, குமாரபாளையம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!