டெல்லி பேரணி- ஆர்ப்பாட்டம்: தொழில் சங்கத்தினர் விழிப்புணர்வு பிரசாரம்

டெல்லி பேரணி- ஆர்ப்பாட்டம்: தொழில் சங்கத்தினர்  விழிப்புணர்வு பிரசாரம்
X

டெல்லி பேரணி ஆர்ப்பாட்டம் குறித்து குமாரபாளையத்தில் நடந்த விழிப்புணர்வு பிரசாரம்

தொழிற்சங்கங்கள் சார்பில் ஏப். 5 ல் டெல்லி பேரணி ஆர்ப்பாட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் குமாரபாளையத்தில் நடந்தது

இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஏப். 5ல், டெல்லி பாராளுமன்றம் நோக்கி பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதில் தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளையும், மின்சார சட்ட திருத்தத்தையும் வாபஸ் வாங்குவது, வேளாண்மை விளை பொருட்களுக்கு ஆதார விலை கொடு, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது, குறைந்த பட்சம் மாத ஊதியம் 26 ஆயிரம், ஓய்வூதியம் மாதம் பத்தாயிரம் வழங்குவது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது, 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை குறைக்கக்கூடாது, 100 நாளை 200 நாட்களாக்கி தினக்கூலி 600 ரூபாய் வழங்கவது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு பொருட்கள் மீதான வரியை குறைத்து விலையை குறைத்திட வேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி டெல்லியில் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இந்த டெல்லி பேரணி, ஆர்ப்பாட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குமாரபாளையம் நகரில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் நடைபயண பிரசாரம் செய்யப்பட்டது. நிர்வாகிகள் அசோகன், சரவணன், பாலுசாமி, ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற கடந்த ஆண்டில் நடந்த நீண்ட நெடிய போராட்டத்தில் தெலங்கானா, மத்தியப் பிரதேசம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். 560 மாவட்டங்களில் இருந்து 60,000 கிராமப்புற விவசாயிகள் குழுக்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர் என்று போராட்டத்தை நடத்திய பாரதிய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாரதிய விவசாயிகள் சங்கத்தின் பிரசாரத் தலைவர் ராகவேந்திர படேல் கூறியதாவது: விவசாயிகள் சந்தித்து வரும் சவால்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 4 மாதங்களுக்கு முன்பு மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாங்கள் தொடங்கினோம். இதன்மூலம் 20,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாத யாத்திரை மேற்கொண்டுள்ளோம். 13,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு சைக்கிள் பேரணி நடத்தி உள்ளோம். 18,000 தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி உள்ளோம். அதோடு, பல்வேறு இடங்களில் மிகப் பெரிய பொதுக்கூட்டங்களையும் நடத்தினோம். அதனால் போராட்டம் வெற்றி பெற்றது என்றார்..

அதைப் போலவே வரும் ஏப்ரல் 5 -ஆம் தேதி டெல்லியில் நடைபெறமும் பேரணி ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேறு டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க உள்ளனர். அதற்கான களப்பிரசாரம் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் முன்னெடுத்து வருகிறோம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture