காவிரி நதிக்கு தீபாராதனை: பெருமளவில் பக்தர்கள் பங்கேற்பு

காவிரி நதிக்கு தீபாராதனை: பெருமளவில் பக்தர்கள் பங்கேற்பு
X

குமாரபாளையத்தில் காவிரி தாய் மற்றும் காவிரி நதிக்கு நடைபெற்ற தீபாராதனை விழாவில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் காவிரி தாய் மற்றும் நதிக்கு நடைபெற்ற தீபாராதனை விழாவில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் காவிரி தாய் மற்றும் காவிரி நதிக்கு நடைபெற்ற தீபாராதனை விழாவில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

அகிலபாரத சந்நியாசிகள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் காவிரி தாய்க்கு தீபாராதனை விழா நடைபெறுவது வழக்கம். காவிரி ஆற்றினை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி, அக். 21ல் கர்நாடக மாநிலம் தலைக்காவிரி பகுதியில் ரத யாத்திரை தொடங்கியது.

இந்த யாத்திரை நவ. 13ல் பூம்புகாரில் நிறைவு பெறவுள்ளது. வழி நெடுக காவிரி ஆற்றில் ஆரத்தி விழா நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக நேற்று மாலை குமாரபாளையம் வந்த ரதயாத்திரை குழுவினர் குமாரபாளையம் வந்தனர். காவேரி நகர் பகுதியில் ரத யாத்திரை குழுவினர்களுக்கு பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர், விடியல் பிரகாஷ், நகர தலைவர் கணேஷ்குமார், நிர்வாகிகள் வெங்கடேஸ்வரன், கண்ணன், சுகுமார் உள்பட பலர் வரவேற்றனர்.

காவிரி தாயின் திருவுருவச்சிலைக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்கார, ஆராதனை நடத்தப்பட்டது. இதில் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

காவிரி கரையோர மக்கள் நிரந்தர தீர்வுக்கு கோரிக்கை

குமாரபாளையம் காவிரி ஆற்றில் இந்த ஆண்டு நான்கு முறை வெள்ளம் வந்தது. ஒவ்வொருமுறை வெள்ளம் வரும்போதும், மாவட்ட கலெக்டர், அமைச்சர் உள்ளிட்ட பலரும் நேரில் வருவதும், பொதுமக்கள் வேண்டுகோள்படி மாற்று இடம் தருகிறேன் என்று கூறுவதும் வாடிக்கையாகி வருகிறது.

திருச்செங்கோடு பகுதியில் 500க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும், அதில் ஒதுக்கீடு செய்து தருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், குமாரபாளையம் பகுதியில் காவிரி கரையோர மக்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்கள் இங்கு விசைத்தறி தொழில் உள்ளிட்ட பல தொழில்கள் செய்து வருகின்றனர்.

இவர்களது சொந்த பந்தங்கள், மகன், மகள்கள் ஆகியோரும் இங்கு உள்ளனர். அனைத்தையும் விட்டுவிட்டு வீடு கிடைக்கிறது என்பதற்காக திருச்செங்கோடு செல்ல முடியுமா? எனவும், தங்களுக்கு குமாரபாளையம் பகுதியில் மாற்று இடம் வழங்க வேண்டியும் கரையோர பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது மீண்டும் வெள்ளம் வந்து கொண்டுள்ளது. இதனால் கரையோர பகுதி மக்கள் மிகுந்த வேதனையில் இருந்து வருகின்றனர். இவர்களது பிள்ளைகள் பள்ளி, கல்லூரிக்கு செல்லவும், பெற்றோர்கள் வேலைக்கு செல்லவும் மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது. இதனை பரிசீலனை செய்திட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையத்தில் 2வது தவணை வெள்ள நிவாரண உதவி

குமாரபாளையம் காவிரி கரையோர பகுதி மக்கள் வெள்ளம் காரணமாக பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு அமைச்சர் நேரு வந்த போது முதற்கட்ட நிவாரண தொகை வழங்கப்பட்டது.

நேற்று குமாரபாளையம் அக்ரஹாரம் பகுதியில் 42 குடும்பத்தினருக்கு தலா 300 ரூபாயும், அமானி பகுதியில் 49 குடும்பத்தினருக்கு தலா 3 ஆயிரத்து 800 ரூபாயும், 76 குடும்பத்தினருக்கு தலா 300 ரூபாயும் நகர தி.மு.க. செயலர் செல்வம் தலைமையில் 2வது தவணை வெள்ள நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது. வி.ஏ.ஓ.க்கள் முருகன், செந்தில், ஜனார்த்தனன், தியாகராஜன், கவுன்சிலர்கள் கனகலட்சுமி, அம்பிகா ராதாகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

காவிரி கரையில் வெளியேற மறுக்கும் பொதுமக்கள்

குமாரபாளையத்தில் நீரில் ஊறி இடியும் நிலையில் காவிரி கரையில் 6 வீடுகள் உள்ள நிலையில் வெளியேற மறுக்கும் பொதுமக்கள் வெளியேற மறுத்து வருகிறார்கள்.

இது பற்றி வருவாய்த்துறையினர் கூறுகையில், குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளான மணிமேகலை தெரு, இந்திரா நகர் பகுதியில், காவிரி வெள்ளம் காரணமாக 6 வீடுகளின் சுவர் நீரில் ஊறிய நிலையில் எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.

இதில் உள்ளவர்களை மண்டபத்தில் வந்து தங்கும் படி கூறியுள்ளோம். முதலில் வர மறுத்தனர். பின்னர் அபாயத்தை எடுத்து சொன்னபின் மண்டபத்தில் வந்து தங்க ஒத்துக்கொண்டனர். தற்காலிகமாக வாடகை வீடு பார்த்து தங்க கூறியுள்ளோம். இலவச வீடுகள் கட்டுமான பணி நிறைவு பெற்றதும், இலவச வீடுகள் இவர்களுக்கு வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் உத்திரவின் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!