செல்வ விநாயகருக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம்

செல்வ விநாயகருக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம்
X

படவிளக்கம் : பள்ளிபாளையத்தில் செல்வ விநாயகருக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டது

பள்ளிபாளையத்தில் செல்வ விநாயகருக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

செல்வ விநாயகருக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம்

பள்ளிபாளையத்தில் செல்வ விநாயகருக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள சில்லாங்காடு என்ற பகுதி அருகே சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தாள்கள் மூலமாக செல்வ விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்செய்யப்பட்டிருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் களியனூர் கிராமம் சில்லாங்காடு பகுதியில், அமைந்துள்ள செல்வ விநாயகர் குழந்தை வேலாயுத சாமி திருக்கோவிலில், கடந்த வாரத்தில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த கோவிலில் ஒன்பதாம் நாள் மண்டல பூஜை, சிறப்பு விசேஷ தினத்தை முன்னிட்டு,20 ரூபாய் 50 ரூபாய் 100 ரூபாய் 500 ரூபாய் மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் என சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தாள்களால் செல்வ விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த விசேஷ நிகழ்வில் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர். மேலும் இந்த சிறப்பு அலங்காரம் பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது . நிகழ்வில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது..

கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜைகள் நடந்து வருகிறது. தினமும் மாலை சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்படுகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!