குமாரபாளையத்தில் போக்குவரத்து இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

குமாரபாளையத்தில் போக்குவரத்து இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
X

குமாரபாளையம் புறவழிச்சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன.

குமாரபாளையத்தில் போக்குவரத்து இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பிரதான சாலைகளில் பல மாடுகள் விபத்து ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டுகள் அச்சத்துடன் வாகனங்களை ஓட்டி செல்லும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

மேலும் காலை வேளையில் நடை பயிற்சிக்கு செல்லும் பொதுமக்களும் அஞ்சியவாறு சென்று வருகின்றனர்.

சேலம் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் வாகன ஓட்டிகளை துரத்திச் சென்று அச்சுறுத்தி வருகிறது. இதனால் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.

விபத்து சம்பவங்களும் மாடுகளால் நடந்து வருவதால், மாடுகளை பிடிக்க இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!